Posts

Showing posts from November, 2023

ADHD என்றால் என்ன? I ADHD meaning in Tamil l அட இவர்களுக்கும் ADHD இருக்கா!

Image
 வணக்கம் நண்பர்களே! இன்று பரவலாக பேசப்படும் ஒரு மருத்துவச் சொல் 'ADHD'. ADHD என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகளை என்ன? அட இவங்களுக்கு ADHD- ஆ! என்று ஆச்சிரியப்பட வைக்கும் சில பிரபலங்கள் பற்றியும் காண்போம். ADHD என்பது Attention Deficit/ Hyperactivity Disorder அதாவது, கவனம் செலுத்துவதில் அதிக சிரமும் (Attention Deficit) அதிவேக தன்மையுடன் செயல்படுத்தல் (Hyperactivity) எதிலும் ஒரு அவசரம் காட்டும் தன்மை (impulsiveness)     போன்றவற்றை ஏற்படுத்தும் மூளையின் குறைபாடு. இது நமக்கும் இருப்பது போல உங்களுக்கும் தோன்றினால், அதில் தவறில்லை எனக்கும் அப்படி தான் தோன்றியது.  ஆனால், இவை நமக்கு அவ்வப்போது வந்து சென்றுவிடும். ADHD கண்டறியப் பட்டவர்களுக்கு, இது நிரந்தரமான ஒன்று. அவர்களால் எதிலுமே கவனம் செலுத்தவோ, சிறிது நேரம் ஒரு இடத்தில் அமைதியாக அமரவோ முடியாது. இந்த ADHD முதன் முதலில் குழந்தைப் பருவத்திலே கண்டறிய முடியும். பின்பு அது அவர்கள் வளர்ந்த பின்பும் தொடரும். ADHD ஒரு குறைபாடா? ஆமாம். மூளையில் ஏற்படும் ஒரு சில இரசாயன குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த நோயை முழுமையாக குணப