Tamil blogs | யாரு சார் நீங்க? | Short Tamil Story of a stranger

பாலு ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்தான். தினமும் மாலை தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு செல்வது அவன் வழக்கம். பல வருடங்களாக இந்த வழக்கம் இருப்பதால், பூங்காவிற்கு யார் எந்த நேரத்தில் வருவார் என்பது எல்லாம் அவனுக்கு அத்துப்படி. வழக்கம்போலப் பூங்காவைச் சுற்றி தன் நடை பயிற்சியை மேற்கொண்டு இருந்தான் பாலு, அப்பொழுது வழக்கத்துக்கு மாறாக ஒரு புதிய முகம் தென்பட்டது. சுமார் ஒரு 7 ௦ வயது மதிக்கத் தக்க பெரியவர், பூங்காவின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தார். புதிதாகப் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்தவர் என எண்ணினான் பாலு. தன் வழக்காமான பயிற்சிகளைச் செய்துக் கொண்டிருந்தான். நேரம் ஓடியது பாலு வந்த வேலையும் முடிந்தது. வீடு திரும்பப் பூங்காவின் வாசல் நோக்கி நடக்க தொடங்கினான். இருக்கையை விட்டு நகராத பெரியவர் பல மணி நேரம் ஆகியும் இருக்கையை விட்டு அந்தப் பெரியவர் நகராமல் இருப்பதை கண்டான். ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று அவர் பக்கம் நடந்தான். அருகில் சென்றபின்பு தான் பெரியவரின் உண்மையான நிலை தெரிந்தது. இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் பல மணி நேரமாக எதையோ எண்ணி அழுதுக்...