Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

ஹலோ நண்பர்களே! 'நகைச்சுவை' மனிதர்களுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரு மிகப் பெரும் வித்தியாசம். நான் படித்து ரசித்த அதிரடியான ஒரு நகைச்சுவை கதை Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | comedy  நீங்கள் வாசிக்கத் தயாராக உள்ளது. படித்து மகிழுங்கள்!


Girl looking through flight window in tamil blogs


வந்தா 5௦௦௦ போன 50 !


விமானம் எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது. இன்னும் நகரவில்லையே..... எனப் பலரும் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் அந்தப் பெண். விமான நிலையத்தை அடைய நெடுந்தூரம் பயணித்த சோர்வு கண்களில் இருந்தது. 'விமானம் பறக்கத் தொடங்கினால் சற்று கண் அயர்ந்து தூங்கலாம்' என வெறிக்க வெறிக்க 'விமானத்தின் வாசல் மூடுமா?' என்று பார்த்தவண்ணம் இருந்தாள்.

அனைவரின் பதைபதைப்பிற்கும் முற்று புள்ளி வைக்கும் வண்ணம், வியர்வை சொட்ட சொட்ட ஏறினார் ஒரு நடுத்தர வயதுடைய ஆண். விமானத்தில் இருந்தோர் அனைவரும் 'நீதனா அது?' என்று அவரைக் கண்களிலே எரிக்கும் வண்ணம் கண்டனர். என்ன முகபாவனை தருவது என்றே தெரியாமல் அவர் குற்ற உணர்ச்சியோடு வெட்கத்தில் சிரித்துக் கொண்டே நுழைந்தார். ஒரு வழியாக விமானத்தின் வாயில் மூடியது; விமானம் பறக்கத் தொடங்கியது.

அனைவரும் நிம்மதியாக அவர் அவர் வேலைகளைச் செய்யத் தொடங்கினர். விறு விறுப்பாக ஏறியவர் அந்தப் பெண்ணின் அருகில் சென்று அமர்ந்தார். தனது பொருட்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு உலகையே வென்றது போலப் பெரும் மூச்சி விட்டார். அந்தப் பெண் நிம்மதியோடு தூங்குவதற்கு இருக்கையை வசதி செய்துவிட்டு உறங்கச் சென்றாள். 'ஹலோ மேடம்' என்ற குரல். கடைசி நிமிடத்தில் ஓடி வந்தவரே தான். திடுக்கென்று கண்ணை விழித்தாள் அந்தப் பெண். 'வணக்கம் சார்' எனப் புன்னகையோடு கூறி விட்டு மீண்டும் தூங்க முயற்சித்தாள்.

'உங்கள் சொந்த ஊர் எது?' தூங்க விடவில்லை அந்தப் பெண்ணை 'நான் காஞ்சிபுரம்' தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். 

'நல்லது சார், நான் சென்னை தான்' என்று பேச்சை முடிக்க முயற்சித்தாள். 'நான் காஞ்சிபுரம் தான் ஆனால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கேன்' என்று பெருமிதத்தோடு கூறினார். 'வாழ்த்துக்கள் சார்' என்று தூங்க சென்றாள்.

'இந்த இடத்திற்கு வர நான் மிகவும் கடுமையாக உழைத்தேன். அதிகம் படித்தேன், தலை சிறந்த வக்கீல்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இன்று அனைவரும் பாராட்டும்படி பல வழக்குகளை வாதாடி வென்றுருக்கிறேன்' தன்னை தானே பெருமை பேசுவதில் வல்லவராகக் கூறினார்.

தவறான இடம் கிடைத்து விட்டது, வேறு இடத்திற்கு சென்று விடலாமா என மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். சிறு புன்னகையோடு உரையாடலை முடிக்க முயற்சித்தாள் எனினும் அது வெற்றிப் பெறாது என அவளுக்கே தெரியும்.    

வக்கீல் விடுவதாக இல்லை


'மேடம்! நேரத்தைக் கடத்த நாம் விளையாட்டு விளையாடலாமா?' என மீண்டும் தொடங்கினார். 'இல்லை சார். எனக்கு இஷ்டம் இல்லை' என்று படுத்துக் கொண்டே கூறினார். 'ஏன் மேடம்? சுலபமான விளையாட்டு தான் வாருங்கள் விளையாடலாம்' குழந்தைத் தனமாகக் கேட்டார். 

'சரி சார். அப்படி என்ன விளையாட்டு?' வேறு வழியின்றி ஆர்வம் காட்டினாள். 'நான் கேள்வி கேட்பேன், உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் எனக்கு 5௦ ரூபாய் தர வேண்டும். அடுத்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் எனக்குப் பதில்  தெரியவில்லை எனில் நான் உங்களுக்கு 5௦ ரூபாய் தருவேன்' எனக் கூறினார்.

அவளுக்கு வந்த ஆர்வமும் போனது. 'இல்லை சார், இந்த விளையாட்டில் ஆர்வம் இல்லை' எனக் கூறி கண்களுக்கு ஓய்வு 
கொடுத்தாள். தன்னை தானே அறிவில் உயர்ந்தவராக எண்ணிக் கொண்ட அவருக்கு இது சிறிது ஏமாற்றம் அளித்தது. 

'சரி மேடம். உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால் 5௦ ரூபாய் தர வேண்டும், எனக்குப் பதில் தெரியவில்லை என்றால் உங்களுக்கு 5௦௦௦ ரூபாய் தருகிறேன் சரியா?' தன் மீது உள்ள அதீத நம்பிக்கையில் கூறிவிட்டார்.      

இது அவளுக்குச் சற்று ஆர்வம் அளித்தது. சோர்வு கலைந்தது எழுந்து உட்கார்ந்து யோசித்தால், ' வந்தா 5௦௦௦ போன 5௦, முயற்சித்து தான் பார்போமே' மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டு, ' சரி சார், கேள்வியைக் கேளுங்கள்'.           

வக்கீல் சார் மகிழ்ச்சியோடு, 'பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் எவ்வளவு?' எனக் கேட்டார். அந்தப் பெண் தன் பையிலிருந்து 5௦ ரூபாய் எடுத்துக் கொடுத்தாள். இப்பொழுது அவளின் முறை. 'எது மலை ஏறும்போது நான்கு கால்களில் ஏறும், இறங்கும்போது மூன்று கால்களில் இறங்கும்?' எனக் கேட்டாள். அவருக்கு ஒன்னுமே புரியவில்லை என்னவாக இருக்கும் என ஆழமாகச் சிந்தித்தார். இணையத்தில் தேடினார், ஒன்றும் கிடைக்கவில்லை. 5௦௦௦ ரூபாயை சலிப்புடன் எடுத்துக் கொடுத்தார். 'பதில் என்ன கூறுங்கள்?' ஆர்வத்துடன் கேட்டார். 

அந்தப் பெண் மீண்டும் தன் பையிலிருந்து 5௦ ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, தனக்கும் பதில் தெரியாது என்பதை உணர்த்தி விட்டு உறங்கச் சென்றாள். 4950 ரூபாய் லாபம் அவளுக்கு. வாய் அடைத்துப் போனார் வக்கீல் சார்.     

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs | கடத்த போறாங்க | Tamil Short story - Kidnap



என்ன நண்பர்களே, Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | comedy கதை எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்குப் பிடித்தவருக்கும் பகிர்ந்திடுங்கள். மேலும் பல கதைகள் தெரிந்துக் கொள்ள நம் குழுவில் இணைத்திடுங்கள். நன்றி!   
  

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை