Tamil blogs | கடத்த போறாங்க | Tamil Short story - Kidnap

kidnappers image in Tamil blog

என் நண்பன் மிகப் பெரிய தொழில் அதிபர். அவர்  நடத்தும் பார்ட்டி. நாட்டின் மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கும் குடும்பத்தினரோடு கலந்துக் கொள்ள அழைப்புவிடுக்கப் பட்டுள்ளது.  
      
இரவு மணி சுமார் 7 இருக்கும். காரில் ஆளில்லா சாலையில் நகரத்துக்கு வெளியே இருக்கும் பங்களாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன். வானத்தில் முழு நிலவு அடர்ந்த மேகங்களுக்கு இடையே பூமியுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. சில்லென்று காற்று காரின் ஜன்னல் வழியாக வீசி மனதை மயக்குகிறது.

தூரத்தில் இருட்டிற்கு இடையே பல வண்ணங்களில் பளிச்சிடும் விளக்குகள் தெரிகிறது. அது தான் பார்ட்டி நடைபெறும் இடமாக இருக்க வேண்டும். அருகே நெருங்கியதும் சந்தேங்கமின்றி தெளிந்தது. பங்களாவின் பிரம்மாண்ட தோற்றமும் ஏற்பாடுகளும் நண்பனின் பண பலத்தை பன்மடங்கு உயர்த்தி காட்டுகிறது. மிகவும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பார்ட்டி என்பதால் பாதுகாப்பு சற்று குறைவாகவே உள்ளது.

வாசலிலே நண்பனைச் சந்தித்து புன்னகைத்து உபசரித்து விட்டேன். மிகப் பெரிய வெள்ளை பளிங்கு மாளிகை; அங்காங்கே பல மேஜைகள்; அவ்வற்றை சுற்றி அழகிய சிகப்பு ஆடை அணிந்த நாற்காலிகள், 'அமர்ந்து பார்' என அழைக்கிறது. ஓரமாக ஆட்களின்றி இருக்கும் ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து நான் மட்டும் அமர்ந்துக் கொண்டேன்.

பார்ட்டியில் உள்ளவர்களை உற்சாகப் படுத்த ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அங்கே முதியவர்கள் கூட்டம் ஒன்று இசை கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றது. 


இருவர்


அவர்களுக்கிடையே ஒரு இளம் வயது பையன் மிக அருமையாக வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறான். அருமையாக வாசிக்கும் அந்தப் பையன் யாரையோ பார்த்துச் சிரித்துக் கொண்டே வாசிக்கிறான். அவன் பார்த்துச் சிரிப்பது யாராக இருக்கும்? சற்று திரும்பினால், அழகிய பெண் ஒருவள். கருப்பு ஆடையில் விலை உயர்ந்த அணிகலன்களுடன் பார்ட்டியில் தனியாகத் தெரிந்தாள். அவளுடன் குடும்பத்தினர் யாருமில்லை. அவளும் அந்தப் பையனைனை ரசித்துக் கொண்டிருக்கிறாள். வழக்கத்திற்கு மாறாக இரு முகங்கள் கண்களுக்குத் தெரிகிறதுது. பார்பதற்கு அடி ஆட்கள்போல உடல் வாகு, ஆடைகளோ பார்ட்டிக்கு பொருத்தமாக இருந்தது. அந்தச் சந்தேகத்திற்கு உரியவர்களை நோட்டமிட்டேன். அவர்களும் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருகின்றனர். என் மனதிற்கு 'ஏதோ நடக்க போகிறது' என்று தோன்றுகிறது.

அவர்கள்மீது இருந்து கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. அந்தப் பெண் எழுந்து வெளியே செல்கிறாள், இருவரும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து செல்கின்றனர், சந்தேகம் சரியாகப் போனது. அந்தப் பெண்ணைக் கடத்துவது திட்டமாக இருக்கலாம். அப்படி நடக்க அனுமதிக்கக் கூடாது. வெளியே சென்று தேடினேன். கார் நிறுத்தும் இடத்தில் அந்தப் பெண் நின்று கொண்டிருக்கிறாள், அவளை வழி மறித்து இருவரும் நிற்கின்றனர். அவளைக் காப்பாற்ற வேண்டும். வேகமாக அங்கே ஓடினேன். என்னைக் கண்டதும் அந்த இருவரும் வேகமாக நகர்ந்து சென்றனர்.

நான் அந்தப் பெண்ணின் அருகே சென்றேன். அவள் முகத்தில் பயம் அதிகமாகத் தெரிகிறது. என்னிடம் எதுவும் பேசாமல் படப்படப்புடன் என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சென்று விட்டாள்.

நான் வந்தது நல்லதாகப் போகிற்று. அவர்களிடமிருந்து அவளைக் காப்பற்றிவிட்டேன். அந்த இருவரும் மீண்டும் அவளைக் கடத்த முயற்சிக்கலாம். உடனே காவல் துறையைக் கைபேசியில் தொடர்புக் கொண்டேன். கடத்தல் முயற்சி நடப்பதை பற்றி விவரித்தேன்.


கடத்தல்


பங்களாவை நோக்கி நடந்தேன். திடீரென அலறல் சத்தம். ‘யாரவது காபற்றுங்கள்!’ என்று பெண்ணின் குரல். வேகமாக உள்ளே நுழைந்தேன். உள்ளே, அந்தப் பெண்ணும் சந்தேகத்திற்குரிய அந்த இரண்டு நபர்களும் காணவில்லை. நினைத்தை போல நடந்தது விட்டது.

சற்று பொறுங்கள்! இசை சத்தமும் நின்றுவிட்டதே? அந்தப் பையன்? அந்தப் பையனையும் காணவில்லை. 'காப்பற்றுங்கள்' என்ற குரல் ஒரு அம்மாவினுடையது. ‘என் பையனை எப்படியா காப்பற்றுங்கள்’ மீண்டும் அந்த அம்மா கதறினாள்.

இப்போது தான் எனக்கு அனைத்தும் புரிகிறது. அந்தப் பெண்ணோடு இருவரும்  கூட்டாளிகள். எப்படி கடத்துவது என்று கடைசியாக ஒரு ஒத்திகைக்காகக் கார் நிறுத்துமிடத்தில் பேசிக் கொண்டிருந்திக்கிறார்கள். என்னைக் கண்டதும் அங்கிருந்து களைந்து விட்டனர்.

ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ஒரு கார் வெளியே சாலையில் இந்த மூவரின் வருகைக்காகக் காத்திருந்தது. அந்தப் பையனைக் காப்பாற்ற வேண்டும். ஜன்னல் சற்று பெரியதாகவே உள்ளது, சுவர் பின்னே தோட்டம். அந்த வழியாகச் சென்றாள், அவர்கள் சாலையை அடைவதற்குள் பிடித்து விடலாம். ஜன்னல் வழியே குதித்தேன். வேகமாக ஓடி அவர்கள் அருகே சென்றேன். அந்தப் பெண் முன்னே சென்று காரின் கதவுகளைத் திறந்துவிட்டாள்.

அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு இருவரும் கார் அருகே சென்று விட்டனர். அந்த இருவரில் ஒருவனின் சட்டையைப் பிடித்தேன். கையில் கத்தி வைத்திருந்ததை கவனிக்கவில்லை. கத்தியை என்மீது வீசக் கையில் ரத்தம் கொட்டியது. எனது மற்றொரு கையை முறுக்கிக் கொண்டு மூக்கில் ஒரு குத்து விட்டேன். வலியில் கத்தியையும் அந்தப் பையனின் உடல் பகுதியையும் கீழே போட்டு விட்டான். அந்தப் பையனின் கையைப் பற்றிக் கொண்டு காலால் மற்றொருவனின் முகத்தில் அடித்தேன். பையனின் கால்களைப் போட்டு விட்டு, தப்பித்தால் போதும் என்று இருவரும் வேகமாகக் காரினுள் ஏறினர்.

காவல் துறையின் வாகனம் வரும் சத்தம் கேட்டது. பின்னால் பார்ட்டிக்கு வந்த மொத்த கூட்டமும் ஓடி வந்துக் கொண்டிருந்தது. கடத்தல் கும்பலின் கார் வேகமாக நகர்ந்தது. பின்னே வந்த மக்கள் விஷியத்தை சொல்லக் காவல் துறையினர் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

கதறிக் கொண்டிருந்த அந்த அம்மா என்னிடம் வந்து ‘ரொம்ப நன்றி சார்!’ என்று அழுதுக் கொண்டே கூறினார். அவரைத் தொடர்ந்து ‘எங்க பையனைக் காப்பாற்றியதற்கு நன்றி சார்’ என அமைச்சர் ஒருவரும் கூறினார். ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. கையில் ரத்தம் ஊத்திய என்னை வண்டியில் ஏறும்படி கேட்டுக் கொண்டனர். 

போகும் வழியிலே எனக்கு வண்டியிலிருந்த மருத்துவர் முதலுதவி அளித்தார். இது போன்ற காயங்கள் எனக்கு அதிகம் வலியைத் தருவதில்லை. நான் இராணுவ காவல் படையின் அதிகாரி சுபாஷ்.  

தொடர்புடைய பிற கதைகள்:


Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?


     

நண்பர்களே! கதை எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். இந்தக் கதை Tamil blogs | கடத்த போறாங்க | Short story of Kidnap உங்களுக்குப் பிடித்திருக்குமென்று நம்புகிறேன். மேலும் இது போன்ற கதைகளைப் படித்து மகிழ, Tamil Stories 4 Everyone’ குழுவில் இணைந்திடுங்கள். உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி!              

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை