Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night உங்களுக்காகக் காத்திருக்கிறது!

Rainy night image in Tamil blog


மழையில் மாட்டிக் கொண்ட பல்லவி :

அடைமழை பொழிந்து கொண்டிருந்தது. இரவு 1௦ பத்து ஆகிவிட்டது. 'அடிக்கும் மழையில், இனி யார் உணவகத்திற்கு வரப்போகிறார்கள்? கடையைச் சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள், நான் பூட்டி கொள்கிறேன்' என்று வேலையாட்களிடம் கூறினாள் பல்லவி.

வேலையாட்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு, 'சென்று வருகிறோம் அம்மா' என்றபடி வீட்டை நோக்கி நடந்தனர். பல்லவியும் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு கடையை மூடத் தயாராகினாள்.

கல்லாப் பெட்டியைத் திறந்து அன்று வசூலான ரூபாயை அடுக்கினாள் பல்லவி. மின்னல் வெளிச்சம் வானத்தைப் பிளந்தது, சட்டெனப் பல்லவி முன் ஒரு நிழல் தெரிந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தால் பல்லவி. ஜன்னல் பக்கம் யாரும் இல்லை.

'ஆனால், மின்னலின் வெளிச்சம் படும்பொழுது யாரோ இங்கு இருப்பது போல் தோன்றியதே?' என்றபடி மீண்டும் ரூபாயை எண்ண தொடங்கினாள். எனினும், பயம் அவள் மனதை ஆட்கொண்டது. 'ஏதாவது ஒரு வழிப்போக்கராக இருப்பார்' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

கதவைத் தட்டும் சத்தம் :

டம்... பயங்கர இடி, அவள் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. 'ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று எண்ணிக் கொள்ளலாம். முதலில் இங்கிருந்து புறப்படுவோம்' என்று ரூபாயை வாரி தன் பைக்குள் வேகமாகப் போட்டாள்.

யாரோ கடையின் கதவைத் தட்டுவது போலச் சத்தம் கேட்டது. பல்லவியின் இதயத்துடிப்பு அதிகரித்தது. உடலில் சிறிது நடுக்கம் ஏற்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் 'யார் அது?' என்று உரக்கக் கேட்டாள்.

கதவின் மறுபக்கத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மையான அமைதி. கதவைத் திறக்காமல் வேகமாகத் தன் பையையும் ரூபாயையும் எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.

அடித்துக் கொண்டிருந்த மழையால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. தன் செல்போனை எடுத்துக் கணவரை அழைக்க முயற்சி செய்தால். ஆனால், மழையின் தாக்கத்தால் தொடர்பு கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் தவித்தாள், பிறகு வேறு வழியின்றி தனக்குத்தானே துணை என்று தைரியத்தோடு கதவை நோக்கி நடந்தாள். பெருமூச்சு வாங்கிகொண்டு கதவைத் திறக்க, 'டக் டக் டக்...' என்று மீண்டும் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. கதைவை உள்ளே தாளிட்டு மீண்டும் கடையின் ஓரத்திற்கு ஓட்டம் எடுத்தாள்.

மேலும் பதற்றம் :

இம்முறை அந்த ஒலி நிற்கவில்லை 'டக் டக் டக்... டம் டம் டம்' என்று மேலும் மேலும் பலமாக ஒலித்தது. ஓடிச் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். யாரோ கதவின் முன் நிற்பது போலத் தெரிந்தது. மணி 1௦.3௦ தாண்டிக் கொண்டு இருந்தது.

'எதுவாக இருந்தாலும் ஒரு கைப்பார்த்துவிடுவோம்' என்று துணிந்து முன்னே சென்றாள். சட்டெனக் கதவைத் திறந்தாள் வெளியே யாரும் இல்லை. அவளுக்குச் சற்று வினோதமாகவும் படபடப்பாகவும் இருந்தது. 'யாராக இருந்தால் என்ன? தற்சமயம் யாருமில்லை, இங்கிருந்து புறப்பட்டு விடுவோம்' என்று கடையின் பூட்டு சாவியை தேடினாள்.

டமால்.... கடுமையான இடி, பல்லவியின் இதயத்துடிப்பு ஒரு நொடி நின்றது. அது மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்குள், சுற்றி ஒரே இருட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதயத்துடிப்பு இன்னும் வேகம் எடுத்தது.

மழையின் குளிரிலும் பயத்தால் வியர்வை துளி முகமெங்கும் வழிந்தது. தனது கைபேசியை வேகம் வேகமாக அழுத்தி வெளிச்சத்தை உண்டு செய்தாள். அந்த வெளிச்சத்தில் பூட்டு சாவியை தேடினாள்.

கல்லா பெட்டியின் அடியில் இருந்தன, அதை எடுத்து மேலே எழுந்தாள். ஒரு உருவம் அவள் முன்னே நின்றது. பதறி அடித்துச் செல்போனின் ஒளியை முன்னே செலுத்தினால், கண்களில் அழிந்த மை; விரித்த தலைமுடி; ஈரம் சொட்ட சொட்ட ஒரு பெண் அந்த வெளிச்சத்தில் தெரிந்தாள்.

அந்தப் பெண் :

'யார் நீ? என்ன வேண்டும்' என்று படபடத்தால் பல்லவி. 'நான் கலா, எனக்குச் சில பிரட் பொட்டலங்கள் தேவைப்படுகிறது' என்றாள் அந்த பெண். பல்லவியின் பதற்றம் சற்று தணிந்தது. 'ஆனால், கடையை நாங்கள் சாத்திவிட்டோம், நீங்கள் புறப்படலாம். நாளைக் காலை வாருங்கள்' என்றபடி வெளியே நடந்தாள்.

'உங்களைக் கெஞ்சி கேட்கிறேன், அவசரமாக வெளியே செல்கிறோம். பசியால் பலர் உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களால் இயன்ற அளவு பிரட் பொட்டலங்களை தாருங்கள்' என்று பிடிவாதம் செய்தாள்.

பிற சுவையான கதைகள் : Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien

அவளின் நிலை கண்டு மனம் இறங்கிய பல்லவி, 'சரி எவ்வளவு பொட்டலங்கள் வேண்டும்?' என கேட்டாள்.

கலா, 'எனக்கு 4௦ பொட்டலங்கள் இருந்தால் போதும். கொஞ்சம் வேகமாக தாருங்கள்' என்றாள். 'சரி சற்றுப் போறுங்கள்' என்று மெழுகுவர்த்தி ஏற்றினாள். 4௦ பொட்டலங்களை எண்ணி எடுத்து கொடுத்தாள்.

கலா,'மிக்க நன்றி! உங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன். எவ்வளவு ரூபாய்?'

'800 ரூபாய் தாருங்கள்' என்றாள் பல்லவி. 

காசோலை :

'இந்தக் காசோலையை வைத்துக் கொள்ளுங்கள்' என்று பொட்டலங்களை அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு வேகமாக வெளியே ஓடினாள் கலா.

'ஆனால், நாங்கள் காசோலை ஏற்கமாட்டோம்... என்று பல்லவி கூறுவதற்குள் கலா மறைந்துவிட்டாள், 'சரி, நாளை வங்கியில் கொடுத்து வாங்கிக் கொள்வோம்' என்றபடி கடையைப் பூட்டி வீட்டிற்கு சென்றாள்.

நடந்தவை அனைத்தையும் தன் கணவனிடம் கூறினாள் பல்லவி. 'அந்தப்பெண் உன்னை ஏமாற்றி உள்ளார் என்று நினைக்கிறேன். ஏன் காசோலையை கொடுத்துவிட்டு வேகமாக ஓட வேண்டும் ?' என்று ஏளனமாகச் சிரித்தார்.

'அப்படி ஒன்றும் இருக்காது. காசோலை தான் என்னிடம் உள்ளதே நாளை வங்கிக்குச் சென்று வருகிறேன்' என்றபடி பல்லவி யோசனையோடு உறங்கினாள். அடுத்த நாள், வங்கியில் அந்தக் காசோலை 'செல்லாது' என்று கூறிவிட்டனர்.

தன் கணவன் கூறியது உண்மை, தான் ஏமாந்துவிட்டோம் என்று வருந்தினாள் பல்லவி. மாதங்கள் ஓடின.

பிற சுவையான கதைகள் : Tamil blogs | புல்லும் சொற்பொழிவும் | Funny story of a speaker

ஒரு நாள் பல்லவிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில்,

'நான் கலா. செல்லாத காசோலையை கொடுத்ததற்கு மன்னித்துவிடுங்கள். என் கணவர் எப்பொழுதும் போல அன்று இரவும் என்னையும் என் குழந்தைகளையும் அடித்துத் துன்புறுத்தினார்.

அவரிடமிருந்து தப்பித்து குழந்தைகளோடு என் சொந்த ஊருக்குப் புறப்பட முயன்றோம். எங்கள் ஊருக்குச் செல்ல நான்கு நாட்களாகும். கையில் போதிய பணமும் உணவும் இல்லை. குழந்தைகளும் கடுமையான பசியில் இருந்தனர். எனவே, தங்களை ஏமாற்ற வேண்டிய நிலைக்கு ஆளானேன். ஆனால், இன்று நாங்கள் அனைவரும் தந்தையின் வீட்டில் நலமாக உள்ளோம்.

பிறரை ஏமாற்றுவது, எவ்வளவு கொடியது என்று நான் அறிவேன். அதற்குப் பரிகாரமாக 2,௦௦௦ ரூபாயை கடிதத்தோடு இணைத்து உள்ளேன். அதை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள்'

என்று எழுதியிருந்தது.

அந்தக் கடிதத்தையும் பணத்தையும் தன கணவனிடம் காட்டி மகிழ்ந்தாள் பல்லவி. சரியான நேரத்தில் செய்யும் உதவி, அனைத்து உதவிகளையும் விட உயர்ந்தது. பல்லவி அந்தச் சமயத்தில் அலட்சியம் செய்யாமல் செய்த உதவியே அவளுக்கு 2,௦௦௦ ரூபாயை ஈட்டி தந்தது.

நீங்களும் இரவு இதுபோல மாட்டிக்கொண்டு பயந்த அனுபவம் உள்ளதா? இருந்தால் அதை comment செய்யுங்கள்.

மேலும் பல சுவையான கதைகளைத் தெரிந்துக் கொள்ள பெல் பொத்தனை அழுத்தவும். Our site is 100% secure, clickbellicon to support us and get instant noifications.



Comments

  1. விறு விறுப்பான கதை களம். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை