Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு



வணக்கம் நண்பர்களே! மனதை உருக வைக்கும் ‘Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு கதையைப் படிக்கத் தயாராகுங்கள்!

Two friends image in Tamil blog


இரு நண்பர்கள் 


'ராம் ரவி' என இரு நண்பர்கள். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். 20 வருடங்களாகப் பக்கத்து பக்கத்து வீடு. பள்ளி முதல் கல்லூரிவரை ஒன்றாகப் படித்து வந்தனர். ரவிக்கு யாரும் இல்லை. அவன் சிறு வயதில் ஒரு விபத்தில் அவன் குடும்பத்தினர் இறைவன் அடி சேர்ந்தனர், ரவி மட்டும் தப்பித்தான். ராமின் குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து வந்தான். கடைசி வரை உடன் இருப்பதாக இருவரும் தங்களுக்குள்ளே சத்தியம் செய்துக் கொண்டனர்.

எந்த நேரமும் ஒன்றாகச் சுற்றுவார்கள் எல்லா செயல்களையும் ஒருவருக்கொருவர் உதவிச் செய்து முடிப்பர். ஒருவருக்கு பிரச்சனை வந்தால் அதைத் தன் பிரச்சனைபோல முன் நின்று எதிர்கொள்வார் மற்றொருவர்.

புதிய நண்பன் ஆகாஷ்


இவர்களின் நட்பைக் கண்டு வியந்து போகாதோர் அந்த ஊரில் இல்லை. இருவருமே தங்களின் நட்பைக் கண்டு பெருமிதம் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் தான் அவர்களின் வீட்டிற்கு அருகே குடி வந்தான் ஆகாஷ். இவர்களின் நட்பைக் கண்டு அவனும் வியந்தான். தன்னையும் அவர்களுள் ஒரு நண்பனாகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டான்.

ஆரம்பத்தில் இரு நண்பர்களும் சற்று தயங்கினாலும், தங்கள் நட்பின் மீது உள்ள நம்பிக்கையால், ஆகாஷின் நட்பு அவர்களின் உறவுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்பினர். ஆகாஷும் அவர்கள் பயின்ற அதே கல்லூரியில் சேர்ந்தான். மூவரும் நல்ல நண்பர்களாகினர். வருடங்கள் ஓடின.

புதிய திருப்பம்


ஒரு நாள் சின்ன வேலையாக ராமும் ரவியும் பக்கத்து ஊர்வரை காரில் சென்றனர். கனமழைப் பெய்துக் கொண்டிருந்தது. ராம் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் ரவி அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். திடீரென அவர்களின் இடது பக்கம் வெளிச்சம். கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைப் பலமாக மோதித் தள்ளியது ஒரு லாரி. இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பதறி அடித்துக் கொண்டு அவர்களைக் காண ஓடி வந்தான் ஆகாஷ்.

அடுத்த நாள் காலை ராம் கண் விழித்தான். கையிலும் முகத்திலும் பலத்த காயம். தன் நண்பனுக்கு என்ன ஆனதோ எனத் தேடிச் சென்றான். ரவிக்கு காயங்கள் குறைவு ஆனால் கண் பார்வை பறிப்போகிய நிலையில் இருந்தான். ராமிற்கு மிகுந்த வருத்தம் எனினும் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ந்தான். ரவியை உடனிருந்து கவனித்துக் கொண்டான். வருடங்கள் ஓடியது.

சிதைந்த நட்பு


ராம் முன்னர் ரவியுடன் அதிகம் நேரம் செலவிட்டதைப் போல இப்பொழுது இல்லை. அவனுக்காக அனுதாபப் பட்டு உதவிய காலம் மாறிப் போனது. ராம் தனது வேலைகளில் அதிக கவனம் செலுத்தினான். ஆகாஷுடன் வெளியே சுற்றினான். ரவியை வாரம் ஒரு முறை வந்து கவனித்துக் கொண்டான்.

வாரம் மாதம் ஆனது. மாதம் ஒரு முறை ரவியுடன் பேசினான். இது ரவியின் மனதிற்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தனக்கென்று இருந்த ஒரே உறவும் முடியும் நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. இந்த வருத்தத்தால் சரியாக உண்ணாமல் கவனிக்க யாருமின்றி நோய் வாய் பட்டு இறந்தான்.

ரவியின் இறப்பு ராமிற்கு சிறிது வேதனை அளித்தாலும், முன்னர் இருந்ததுப்போல நெருக்கம் இல்லை. அவன் கண் பார்வை இழந்ததும் அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிச் சென்றவன் இன்று ‘முன்னாள் நண்பன்’ எனப் பேருக்கு இறப்பில் கலந்துக் கொண்டான்.

ரவியின் இறப்பிற்கு பெரியவர் ஒருவர் வந்திருந்தார். கூட்டத்தில் யாரையோ தேடிக் கொண்டிருந்தார். நேராக ஆகாஷிடம் வந்து, ‘ நீதான் ரவியின் நண்பன் ராம் என்பவனா?’. ஆகாஷ், ‘ இல்லை சார். அதோ அவன் தான் ராம்’ என ராமை கைக்காட்டினான்.

நண்பனுக்குக் கடிதம்


நேராக ராமை நோக்கி நடந்த பெரியவர், ‘நீதானே ராம்?’. ராம், ‘ஆமாம் சார்’. பெரியவர்,’ இந்தக் கடிதம் உனக்கு ரவி எழுதியது. அவன் இறக்கும்போது உன்னிடம் தரக் கூறினான். ஆனால், இவ்வளவு விரைவாக அவன் இறப்பானென நான் நினைக்கவில்லை’ எனக் கண்களில் ஓரம் வடிந்த நீரை துடைத்தப் படி சென்றார்.

கதைகள் பிடிக்குமா? இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் : 
(Recommended)

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night


வியப்போடு கடிதத்தைப் பிரித்துப் படித்தான். ‘ நண்பா! உன் நட்பின் அரவணைப்பில் வளர்ந்த எனக்குத் தாய் தந்தை இல்லா ஏக்கத்தைப் போக்கியவன் நீ. உனக்கும் நம் குடும்பத்தினருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன். நம் நட்பிற்கு என் நன்றியைக் காட்டும் நேரம் இது என உணர்கிறேன். விபத்தால் உன் கண் பார்வையை நீ இழந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. வாழ்க்கை முழுவதும் நீ கஷ்டப்படுவதை என்னால் காண இயலாது. அதனால் உன்னைக் கேட்காமல் ஒரு முடிவு எடுத்து விட்டேன். இதை உன்னிடம் கூறினால் நீ வருத்தபடுவாய் எனவே என் இறப்பிற்கு பின் இதை நீ அறிந்துக் கொள்கிறாய். என் கண் பார்வை போகப்போவதை எண்ணி எனக்கு வருத்தமில்லை; என் நண்பன் நீ இருகிறாய்! நான் கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என்ற சத்தியத்தை நிறைவேற்றி விட்டேன். நான் இறந்தாலும் என் கண்கள் மூலமாக உன்னுடன் என்றும் இருப்பேன்.’ 

கண்களில் நீர் வழிய இறந்த தன் நண்பனைக் கட்டி அணைத்தபடி கதறி அழுதான் ராம்.

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs | அவள் எப்படி தப்பித்தாள்? | Short story of wise girl





இந்தக் கதை ‘Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு உங்களுக்குப் பிடித்திருந்தால் பிறருக்கும் பகிர்ந்திடுங்கள். மேலும் பல கதைகள் படிக்கக் குழுவில் இணைந்திடுங்கள்!               
             



Comments

  1. கதையின் இறுதி பகுதி விளங்கவில்லை

    ReplyDelete
  2. விபத்தில் கண் இழந்தவன் ராம் தான், ஆனால் ரவி தனது கண்ணை , நண்பன் ராமுக்கு கொடுத்து,ரவி குருடன் ஆனான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை