Tamil blogs | ஏமாற்றினால் ஏமாறுவாய்! | funny short moral story

Lier image in Tamil blogs

ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் இருந்தனர். நால்வரும் நெருங்கிய நண்பர்கள், எது செய்தாலும் ஒன்றாகத் தான் செய்வார்கள். கல்லூரியில் வேலை செய்யும் கணக்குப் பேராசிரியர் மூர்த்தி, வழக்கம்போலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியும் சமயத்தில், ‘பிள்ளைகளே! நாளை ஐந்தாவது பாடத்தில் இருக்கும் 16 மதிப்பெண் வினா-விடைகளை படித்து வாருங்கள் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன்’ எனக் கூறி விட்டுச் சென்றார் மூர்த்தி.

நான்கு நண்பர்களும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர், ‘என்னடா இது? இன்று இரவு நாம் புதிய 'வீடியோ கேம்' விளையாடுவதாக இருந்தோமே, அவர் நாளைத் தேர்வு வைக்கப் போவதாகச் சொல்கிறாரே’ என்றான் ஒருவன்.

‘விடுடா பார்த்துக் கொள்வோம். நாம் திட்டமிட்ட படியே இன்று இரவு விளையாடத் தான் போகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னடா சொல்றீங்க?’ என மற்றவர்களைக் கேட்டான் இன்னொருவன். ‘ஆமாம் -டா விளையாடுவோம்’ என மற்ற இருவரும் தலையாட்டினர்.

அவர்கள் பேசி வைத்த படியே இரவு விளையாடினர். பின் அனைவரும் வீடு நோக்கி நகர்ந்தனர். காலை விடிந்தது, கல்லூரிக்கு எப்பொழுதும் போல ஒன்றாகப் புறப்பட்டனர். ‘தேர்வுக்கு ஒன்னுமே படிக்கலையே. என்ன செய்யப் போகிறோம்?’ என ஒருவன் ஆரம்பிக்க, ‘யோசிக்கலாம் வழி கிடைக்காமலா போகும்’ என்றான் அடுத்தவன்.

என்ன திட்டம்?


அவர்கள் செல்லும் வழியில் சேரும் சகதியுமாக இருந்தது. உடனே சிந்த்திதனர் கதை ஒன்றை தயார் செய்து விட்டனர். அனைவரும் சேற்றில் விழுந்து துணியை அழுக்காக்கிக் கொண்டனர். பேராசிரியர் கேட்டால் நாம் காலையில் பள்ளி தோழியின் திருமணத்திற்கு சென்றுவிட்டு கல்லூரிக்குக் காரில் திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு சக்கரம் வெடித்து விட்டதாகவும், கார் நிலை தடுமாறி விழ நாம் சேற்றில் விழுந்து விட்டதாகவும் கூறி விடலாம்.

அந்தச் சக்கரத்தைச் சரி பண்ணிவிட்டுக் கல்லூரிக்கு வருவதற்குள் நேரம் ஆகிவிட்டதாகவும், தேர்வு முடிந்து விட்டதாகவும் கூறி விடுவோம் என்று திட்டமிட்டனர்.

நேரத்தைக் கடத்த ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தனர். பின்னர் தேர்வு முடியும் நேரம் வந்ததும், கல்லூரியை நோக்கி நகர்ந்தனர். கல்லூரியை அடைந்து தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அறையில் தேர்வு முடிந்து மூர்த்தி அனைவரிடம் இருந்தும் விடை தாள்களை வாங்கிக் கொண்டிருந்தார். 

‘உள்ளே வரலாமா சார்’ என ஒன்றாகக் கேட்டனர். மூர்த்தி திரும்பிப் பார்த்தார், ‘வாருங்கள். என்ன நேர்ந்தது நால்வருக்கும்? ஏன் இவ்வளவு தாமதம்? இன்று முக்கியமான தேர்வு உள்ளது தெரியும் அல்லவா?’ எனக் கேட்டார். அதே சமயத்தில் அவர்களின் ஆடைகளில் சேறு இருப்பதையும் நோட்டமிட்டார்.

நால்வரில் ஒருவன் அவர் முன்னே வந்து, அவர்கள் தயாரித்து வைத்திருந்த கதையைக் கூறினான். மூர்த்திக்கு நான்கு நண்பர்களைப் பற்றியும் ஓரளவிற்கு தெரியும், சற்று நேரம் சிந்தித்தார்.

‘சரி பிள்ளைகளே, ஒன்றும் பிரச்சனை இல்லை. இது முக்கியமான தேர்வு என்பதால் நீங்களும் எழுதிதான் ஆகா வேண்டும். இப்பொழுது வகுப்பிற்கான நேரம், எனவே நீங்கள் நால்வரும் திங்கள் கிழமை தேர்வு எழுதிக் காட்டுங்கள்’ எனக் கூறி பாடம் எடுக்கத் தொடங்கினார்.

மூர்த்தி தங்கள் கதையை நம்பிவிட்டதை எண்ணி நான்கு நண்பர்களும் மனதிற்குள்ளே சந்தோஷப்பட்டனர். அன்று வெள்ளி கிழமை 2 நாட்கள் விடுமுறைக்கு பின் திங்கள் தான் தேர்வு எனவே அதற்குள் படித்து விடலாம் என்று நால்வரும் பெருமூச்சி விட்டனர்.

தேர்வு எழுத நிபந்தனை


தேர்வு நாள் வந்தது, இரண்டு நாட்களில் நண்பர்கள் கடுமையாகப் படித்து நம்பிக்கையோடு தேர்வு எழுத வந்தனர். மூர்த்தி நால்வரையும் அழைத்தார். ‘நீங்கள் நான்கு பேரும் 2 நாட்கள் இடைவேளைக்குப் பின் எழுதுவதால், உங்களுக்கு வேறு வினாத்தாள் வழங்குவேன்’ எனக் கூறினார்.

நால்வரின் முகத்தில் எந்த ஒரு பயமும் இல்லை, நன்றாகப் படித்து வந்துள்ளனர். ஆனால், மூர்த்தி அதோடு முடிக்கவில்லை. ‘மற்றொரு நிந்தனையும் உள்ளது. நால்வரும் தனித்தனி அறைகளில் தான் தேர்வு எழுத வேண்டும்’ எனக் கூறினார்.

இதுவும் அவர்கள் முகத்தில் எந்த ஒரு பயத்தையும் கொண்டு வரவில்லை. நால்வரும் தேர்வு எழுதத் தயாரகினர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றனர்.

மூர்த்தி ஒவ்வொரு அறைக்கும் சென்று ஆளுக்கு ஒரு வினாத்தாள் கொடுத்தார். வினாத்தாளை பார்த்து விட்டு நான்கு பேரும் ஆடிப் போகினர். தாங்கள் அறிவாளிகள் என நினைத்துக் கதையைத் தயாரித்து ஏமாற்ற நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என உணர்ந்தனர்.

அப்படி என்ன இருந்தது வினாத்தாளில்???

நீங்களே பாருங்கள்.

உங்களுக்கும் ஒரு வினாத்தாள் ;)

                                                                                                   மொத்த மதிப்பெண்கள் : 100


1.  உங்கள் பெயர் என்ன?                                 (1 மதிப்பெண்)
_________________________________

2.  நீங்கள் சென்ற காரின் எந்தச் சக்கரம் வெடித்தது?  (99 மதிப்பெண்கள்)

அ) காரின் முன் பகுதியின் வலது சக்கரம்
ஆ) காரின் முன் பகுதியின் இடது சக்கரம்
இ) காரின் பின் பகுதியின் வலது சக்கரம்
ஈ) காரின் பின் பகுதியின் இடது சக்கரம்


கதையைத் தயாரித்தவர்கள் சக்கரத்தை முடிவு செய்யவில்லை. மூர்த்தின் சாமர்த்தியம் வென்றது! பேராசிரியர் பேராசிரியர் தான்.

நீதி:


யார் ஒருவன் தான் அறிவாளி என்று நினைத்துப் பிறரை ஏமாற்ற நினைக்கிறானோ அவனே மிகப்பெரிய முட்டாள். 

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs | சித்திரமும் கைப்பழக்கம்! | Practice makes a man perfect - story



வாசகர்களே! இந்தக் கதை 'Tamil blogs | ஏமாற்றினால் ஏமாறுவாய்! | funny short moral story' பிடித்திருந்தால் உங்களுக்குப் பிடித்தவர்ளுக்கும் பகிர்ந்திடுங்கள். மேலும் இது போன்ற பல கதைகள் நீங்கள் வாசிக்க, 'Tamil Stories 4 Everyone' குழுவில் இணைந்திடுங்கள். நன்றி!!!   


Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை