Tamil blogs | அவள் எப்படி தப்பித்தாள்? | Short story of wise girl

Thinking girl image in Tamil blogs

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்தார். அந்த வருடம் இயற்கை மாற்றத்தினால் பருவ மழை பொய்த்துப் போனது. அந்த வருடம் விளைச்சல் சரியாகக் கிடைக்காமல் அவர் குடும்பம் பட்டினியில் தவித்தது.

விவசாயிகளின் இது போன்ற நிலைமையைப் பயன்படுத்தி தங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொள்ள நினைக்கும் கழுகு கூட்டமும் அந்த ஊரில் உள்ளது. உண்ண உணவின்றி தவித்த தன் குடும்பத்தைக் கண்டு வருந்திய அந்த விவசாயி, வேறு வழியின்றி அந்தக் கழுகு கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பணத் தவளையிடம் சிக்கிக் கொண்டார்.

அதிக வட்டி என்று தெரிந்தாலும் இறைவன் மீது பாரத்தை போட்டுத் தன் நிலத்தை வைத்துக் கடன் வாங்கி விட்டார். வாங்கிய பணத்தை மிகவும் கவனமாகச் செலவழித்தார். வருவாய் ஈட்ட வேறு வழிகளைத் தீவிரமாகத் தேடினார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. சந்தையில் காலை முழுவதும் கூலி வேலை, மததியம் பிற கடைகளில் வேலை செய்வது என அயராது உழைத்து, வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தி விட்டார்.

வீட்டின் நிலைமையும் பஞ்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் கடன் கொடுத்தவன் அவனர் வீட்டிற்கு வந்தான். ‘ஏன் இவ்வளவு நாட்களாக வட்டியை தரவில்லை?’ எனக் கேட்க ஆடிப் போனான் அந்த விவசாயி. ‘அய்யா நான் தான் வாங்கிய கடன் அனைத்தையும் வட்டியுடன் கொடுத்து விட்டேனே. மீண்டும் என்ன பணம் தர வேண்டும்?’ எனக் கேட்டார்.

‘இல்லை நீ  கடைசி வட்டியை பல மாதங்களாகக் கட்டவில்லை எனவே உன் நிலம் இனி எனக்குச் சொந்தம்’ என வஞ்சகமாகக் கூறினான். விவசாயி இடிந்து விழுந்தான். ‘நான் போன முறை வந்தபொழுது இது தான் கடைசி வட்டியெனக் கூறினீர்களே? இப்பொழுது இன்னும் ஒரு வட்டி என்றால் அநியாயமாக உள்ளது அய்யா’ எனக் கெஞ்சினான் விவசாயி.

ஒப்பந்தம்


‘அது எல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு வட்டியை குறிப்பிட்ட நேரத்துக்குள் தரவில்லை என்றால் நிலத்தைத் தந்துவிடுவதாகக் கையொப்பம் இட்டுள்ளாய். நிலம் இனி எனது’ எனப் பேராசையோடு கூறினான் கடன் கொடுத்தவன்.

தான் படிக்காதவன் என்பாதால் நிபந்தனை உள்ளதை பற்றிக் கூறாமல் கையொப்பம் வாங்கி, இப்பொழுது அவனை ஏமாற்ற நினைப்பதை புரிந்துக் கொண்டான் விவசாயி. ‘நாளை வருவேன், நிலத்திற்கான பத்திரங்களை எடுத்து வை’ என்றபடி அங்கிருந்து புறப்பட்டான் கடன் கொடுத்தவன்.

தான் ஏமாற்றப்பட்டதை எல்லோரிடமும் கூரியும் எவரும் உதவி செய்ய முன் வரவில்லை. உடைந்து போன விவசாயி அழுதுக்கொண்டே வீட்டிற்க்கு வந்தான். விவசாயிக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். தன் அப்பா துயரப் படுவதை அவளால் சகித்துக் கொள்ள இயலவில்லை. அப்பா நாளை உங்களுக்காக நான் நீதி கேட்கிறேன் என்று ஆறுதல் கூறினாள்.

அடுத்த நாள் விடிந்தது, கடன் கொடுத்தவன் வாசலில் வந்து நின்று விட்டான். விவசாயின் மகள் அவன் முன் வந்தாள், ‘நீங்கள் இவ்வாறு செய்வது நியாயமில்லை. கடைசி வட்டியை தர இன்னும் ஒரு வாரம் அவகாசம் தாருங்கள்’ எனப் பணிவுடன் கேட்டாள்.

புதிய சூழ்ச்சி


அவளது அழகில் மயங்கிப் போன அந்தப் பணத் தவளை எப்படியாவது அவளையும் திருமணம் செய்து நிலத்தையும் வாங்கி விட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 

சிறிது நேரம் சிந்தித்த பின், ‘சரி நீ பணிந்து கேட்பதால் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவோம். இதோ இங்கே கீழே உள்ளதே கற்கள். அவற்றில் ஒரு வெள்ளை கல்லும் ஒரு கருப்பு கல்லும் எடுத்து இந்தப் பையினுள் போட்டு விடுகிறேன். நீ கண்களை மூடிக்கொண்டு ஒரு கல்லை எடுக்க வேண்டும். எடுத்த கல் வெள்ளை என்றால் நான் உங்கள் நிலத்தை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் வட்டியும் தர வேண்டாம். ஆனால் கருப்பு கல்லை எடுத்தால், நீ என்னைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் நிலத்தையும் எனக்குத் தந்து விட வேண்டும். சம்மதமா?’ எனக் கேட்டான்.

விவசாயிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘வேண்டாம் அம்மா! நிலம் போனால் போகட்டும் உன்னை இவனுக்குத் திருமணம் செய்து தரமாட்டேன்’ என்று தன் மகளிடம் உரைத்தார். அவளோ, ‘அப்பா நமக்கு இதை விட்டால் நிலத்தைத் திரும்பப் பெறுவதற்கு வேறு வழி கிடைக்காது. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்’ எனத் தன் தந்தையை சமாதனப் படுத்தினாள். ‘எனக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்மதம்’ என அவனிடம் கூறினாள். அதற்குள் நடப்பதை காண மக்கள் கூட்டமும் கூடியது.

பேராசை கொண்ட அவன் புத்தி இங்கே சூழிச்சி செய்ய நினைத்தது. ஒரு வெள்ளை ஒரு கருப்பு கல்லுக்குப் பதிலாக, இரண்டு கருப்பு கற்களைத் தன் பைக்குள் போட்டான்.

விவசாயின் மகள் அதைக் கவனித்து விட்டாள். கண்களைக் கருப்பு துணியால் கட்டி விட்டு, சிரித்துக் கொண்டே பையை அவள் முன் நீட்டினான் அவன். விவசாயின் மகள் சாமர்த்தியமாகப் பையினுள் கையைவிட்டு கல்லை எடுத்து, கையைத் திறப்பதற்குள் கல்லைக் கீழே போட்டாள்.

கண்களின் கட்டை அவிழ்த்து, ‘அச்சச்சோ! கைத்தவறி கல் கீழே விழுந்து விட்டது. அது என்ன கல் என்று பார்கவில்லையே. கீழே உள்ள இவ்வளவு கற்களில் அந்தக் கல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது?’ என்று ஒன்றும் அறியாதது போலக் கேட்டாள்.

சுற்றி இருந்த ஊர் மக்கள், ‘அதனால் என்ன அந்தப் பையினுள் இருக்கும் மற்றொரு கல்லை எடுத்தால், நீ எடுத்த கல் எதுவென்று தெரிய போகிறது’ எனக் கூறினர். பையினுள் இருந்த கல்லை வெளியே எடுத்தாள், 'கருப்பு கல் எனவே வெள்ளை கல்லை எடுத்திருக்கிறேன். ஒப்பந்தப் படி நிலம் இனி எங்களுக்கே' என்றாள். அவள் போட்ட திட்டம் நிறைவேறியது. பேராசைக்காரன் விவசாயி கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தை வேறு வழியின்றி கிழித்துப் போட்டுவிட்டு அங்கிருந்து கோவத்தோடு சென்றான். தன் சாமர்த்தியத்தால் தந்தைக்கு நிலத்தையும் மீட்டுக் கொடுத்து, தானும் தப்பித்துக் கொண்டாள் அந்தப் பெண்.                  

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?


                   
இது போன்ற மேலும் பல கதைகளைப் படிக்க நமது 'Tamil Stories 4 Everyone' குழுவில் இணைந்திடுங்கள்!

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை