Tamil blogs | யாரு சார் நீங்க? | Short Tamil Story of a stranger

Man sitting on Park chair in Tamil blog


பாலு ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்தான். தினமும் மாலை தன் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு செல்வது அவன் வழக்கம். பல வருடங்களாக இந்த வழக்கம் இருப்பதால், பூங்காவிற்கு யார் எந்த நேரத்தில் வருவார் என்பது எல்லாம் அவனுக்கு அத்துப்படி.

வழக்கம்போலப் பூங்காவைச் சுற்றி தன் நடை பயிற்சியை மேற்கொண்டு இருந்தான் பாலு, அப்பொழுது வழக்கத்துக்கு மாறாக ஒரு புதிய முகம் தென்பட்டது. சுமார் ஒரு 7௦ வயது மதிக்கத் தக்க பெரியவர், பூங்காவின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தார். புதிதாகப் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்தவர் என எண்ணினான் பாலு. தன் வழக்காமான பயிற்சிகளைச் செய்துக் கொண்டிருந்தான். நேரம் ஓடியது பாலு வந்த வேலையும் முடிந்தது. வீடு திரும்பப் பூங்காவின் வாசல் நோக்கி நடக்க தொடங்கினான்.

இருக்கையை விட்டு நகராத பெரியவர்


பல மணி நேரம் ஆகியும் இருக்கையை விட்டு அந்தப் பெரியவர் நகராமல் இருப்பதை கண்டான். ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று அவர் பக்கம் நடந்தான். அருகில் சென்றபின்பு தான் பெரியவரின் உண்மையான நிலை தெரிந்தது.

இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் பல மணி நேரமாக எதையோ எண்ணி அழுதுக் கொண்டே இருந்துள்ளார். பாலுவிற்கு வீடு திரும்பும் நேரமாகியது ஆனால் பெரியவரை அப்படியே விட்டு விட்டுச் செல்லவும் மனம் இல்லை. பெரியவருக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டு விடுவோம் எனத் தீர்மானமாக அவரை நெருங்கினான். அவர் அருகே இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். ‘யாரு சார் நீங்க? என்ன ஆச்சு ஏன் அழுவுறீங்க?’ கேட்டு விட்டான். பெரியவர் எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்தார். ‘என்ன பிரச்சனை சொல்லுங்க சார். மனதில் உள்ள பாரம் இறங்கும்’ தொடர்ந்து கேட்டான் பாலு, ’வீட்டில் உங்களை எதாவது சொல்லி விட்டார்களா?’ பெரியவர் பாலுவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட இல்லை.

பாலுவும் விடுவதாக இல்லை, ‘என்னை உங்கள் பையனாக நினைத்துக் கொள்ளுங்கள். அழுகாமல் மனதில் உள்ளதைக் கொட்டி விடுங்கள்’ எனக் கூறினான். பெரியவர் சற்று நிமிர்த்து பாலுவின் முகத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் மீண்டும் அழுக தொடங்கினார். பெரியவருக்கு என்ன தான் நேர்ந்தது என்று ஒரே குழப்பம் பாலுவிற்கு. பைத்தியமாகா இருப்பாரோ என்று சற்று யோசித்தான் எனினும் அவரின் உடை பாவனைகளைக் கண்டதும் அந்தச் சந்தேகம் போயிற்று.

பாலு இன்னும் சற்று இறங்கி, ’உங்கள் பிரச்சனை என்னவென்று கூறுங்கள் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ எனக் கூறினான். அதுவரை அழுதுக் கொண்டிருந்த பெரியவர் சட்டென்று அழுகையை நிறுத்தினார். பாலுவிற்கு மனதில் மகிழ்ச்சிப் பொங்கியது. ஒரு வழியாக அழுகையை நிறுத்தி விட்டார் என்று எண்ணிய படி, ‘இப்போது கூறுங்கள் நீங்கள் அழுக காரணம் என்ன?’ என நம்பிக்கையோடு கேட்டான்.

பெரியவரின் வரலாறு


அதுவரை பேசாமல் இருந்த முதியவர் முதல் முறை பேசத் தொடங்கினார், ‘ தம்பி, எனக்கு எந்தப் பண கஷ்டமும் கிடையாது. இளமையில் இருந்தே அயராது உழைத்து அடுத்த தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்கள் வரை சம்பாத்தித்து விட்டேன். 30 வயதில் திருமணம் செய்துக் கொண்டேன். மிகவும் அழகான மனைவி. 3௦ வயதிலும் இப்படியொரு அழகிய பெண் கிடைத்துள்ளதே அதிர்ஷ்டசாலி இவன் எனப் பலரும் என்னைக் கண்டு மனம் வெந்தனர். அப்படி வாழ்ந்தவன்.’

‘இதெலாம் சரி சார் உங்கள் பிரச்சனை என்ன?’ குறுக்கிட்டான் பாலு. ‘சொல்கிறேன் தம்பி’ தொடர்ந்தார் பெரியவர், ‘இப்படி ஊரில் உள்ளவர்களின் கண்பட்டுச் சில ஆண்டுகளிலே என் மனைவி நோய் வாய் பட்டு இறந்து விட்டாள். அன்று முதல் நான் வேறு திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை. அவள் நினைவிலே பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்.’

‘சார், உங்கள் மனைவியை எண்ணி இன்றும் வருத்தப் படுகிறீர்களா? உங்கள் அன்பு மிகவும் உயர்ந்தது’ என்றுக் கூறியபடி இதுதான் பெரியவரின் அழுகைக்கு காரணமாக இருக்குமென்று யூகித்தான். பெரியவர் குறுக்கிட்டார், ’இல்லை தம்பி, அதற்கு அழுகவில்லை. பல வருடங்களைத் திருமணம் செய்துக் கொள்ளாமல் காலம் தள்ளி விட்டேன். வயது முதிர்ந்ததும் என்னைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவை என்பதை உணர்ந்து போன வருடம் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டேன்.’ பாலுவிற்கு தூக்கி வாறி போட்டது.

பெரியவர், ’நான் திருமணம் செய்துக் கொண்டவளோ 20 வயது பெண்.’ பாலு மனதிற்குள்ளே நொந்துப் போனான், ‘பெரியவரே, என்ன தான் உங்கள் பிரச்சனை நேராகச் சொல்லுங்கள்’ கோபத்தோடு கேட்டான்.
‘தம்பி, அவள் சின்னப் பெண் என்றாலும் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். மிகவும் அழகாக இருப்பாள். காலையில் எனக்கு உணவு சமைத்து பரிமாறுவாள். மதியம் என் துணிகளைத் துவைத்து விட்டு, சற்று நேரம் ஓய்வெடுப்பாள். ஆனால் இரவு தான்....’

‘என்ன பெரியவரே?’ பாலு கேட்க. ‘இரவு தான் சீக்கிரமாகத் தூங்காமல், அதிக நேரம் என்னுடன் பேசிக் கொண்டே இருப்பாள்’ எனப் பெரியவர் கூறினார். பாலுவிற்கு கோபம் தலைக்கு ஏறியது. ‘பணத்திற்கு பஞ்சம் இல்லை, 7௦ வயதில் உங்களை அன்பாகப் பார்த்துக் கொள்ளும் 20  வயது மனைவி. பின் ஏன் அழுதீர்கள்?’ எனச் சற்று பொறாமையோடு கேட்டான்.
தம்பி எல்லாம் சரி தான். இது அனைத்தும் ஞாபகம் இருக்கு எனக்கு. ஆனால், நான் நேற்று வரை எங்கு வாழ்ந்தேன், எப்படி இங்கு வந்தேன், இப்பொழுது எங்குச் செல்ல வேண்டும் என்று தெரியல்லையே!’ எனக் கூறி மீண்டும் அழத் தொடங்கினார். வயது முதிர்ச்சியால் அனைத்தும் கிடைத்தும் வாழும் இடத்தை மறந்து செய்வது அறியாது இருக்கும் அவரைக் கண்டு, திகைத்துப் போனான் பாலு. 

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey



இந்தக் கதை 'Tamil blogs | யாரு சார் நீங்க? | Short funny Tamil Story of a stranger' உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய சுவாரஸ்யமான கதைகளைத் தெரிந்துக் கொள்ள நம் 'Tamil Stories 4 Everyone' தொடர் பதிவில் இணைந்திடுங்கள்!                         

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை