Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien


வணக்கம் நண்பரகளே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று ஒரு கதை அல்ல பல கதைகள். 
புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை 'Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien' தொகுத்து வழங்கி உள்ளேன். 

Albert Einstein image in Tamil blogs 'Tamil Stories 4 Everyone'


ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இரயில் பயணம்

ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கல்லூரி ஒன்றில் சிறப்புரையாற்ற சென்றுகொண்டிருந்தார். அந்த ரயிலில் இருந்த அனைவருக்கும் ஐன்ஸ்டீனை தெரியும். அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கையொப்பம் வாங்கவும் முயற்சி செய்தனர்.
இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்பே, அவருக்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் அவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவியிருந்தது. 
ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண்டு இருக்க, பயணச்சீட்டு சரிபார்க்க ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அனைவரும் தங்கள் பயணச்சீட்டை காட்டிக் கொண்டிருந்தனர். ஆய்வாளரைக் கண்டதும் ஐன்ஸ்டீன் தனது சீட்டை எடுக்க முயற்சி செய்தார். ஆனால், அவரின் நேரம் பயண சீட்டைக் காணவில்லை. சட்டை பையில் தேடினார் கிடைக்கவில்லை. தனது காற்சட்டை பையில் தேடினார் அங்கும் இல்லை. அவர் பயணச்சீட்டை தேடுவதை கவனித்து விட்டார் ஆய்வாளர். 
'ஐன்ஸ்டீன் அவர்களே, நான் உங்களை நன்கு அறிவேன். நீங்கள் பயணசீட்டை காட்ட தேவை இல்லை' என்றார். எனினும் ஐன்ஸ்டீன் தேடிக் கொண்டே இருந்தார். மீண்டும் ஆய்வாளர் அவர்கள், 'பயணச்சீட்டின்றி பயணம் செய்யும் குணம் கொண்டவர் நீங்கள் அல்ல என்பதை நான் அறிவேன். சீட்டைத் தேட அவசியமில்லை' என்றார். 
அதைக் கூறிவிட்டு மற்ற பயணிகளின் சீட்டைச் சரிபார்க்க சென்றார் ஐன்ஸ்டீன் அவருக்குச் செவி சாய்க்காதது போலத் தேடிக்கொண்டே இருந்தார். அதைக் கவனித்த ஆய்வாளர், 'இங்கு உள்ள அனைத்து பயணிகளுக்கும் உங்களைப் பற்றி நன்கு தெரியும், யாரும் உங்களைத் தவறாக எண்ண மாட்டார்கள்' என்று மீண்டும் கூறினார்.
ஐன்ஸ்டீன் தனது தேடுதலைத் தொடர, ஒரு கட்டத்தில் ஆய்வாளர், 'என்ன ஆயிற்று உங்களுக்கு?' என்று வினவினார். 


ஐன்ஸ்டீன் சீட்டைத் தன் பெட்டியினுள் தேடிக்கொண்டே கூறினார், 'நான் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு உள்ள அனைவரும் அறிவார்கள். ஆனால், நான் எங்குச் செல்ல வேண்டும் என்பதை நான் அறியேன். சீட்டின்றி சேரும் இடத்தை என்னால் அறிந்து கொள்ள இயலாது' என்றார்.

 

நல்ல உடைகள்


ஐன்ஸ்டீனின் மனைவி அவரை எப்பொழுதும் நன்றாக உடை உடுத்தும் படி கூறிக் கொண்டே இருப்பார். அதற்குஐன்ஸ்டீன் தரும் பதில்கள் நகைச்சுவையானவை. ஒரு முறை தங்கள் குடும்பத்தில் ஒரு விழாவிற்கு புறப்பட்டுச் செல்லும் வேளையில், எப்பொழுதும் போல அவர் மனைவி 'நல்ல உடைகளை அணிந்து வரலாம் அல்லவா?' என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன், 'விழாவில் பங்கேற்கும் அனைவரும் என்னை நன்கு அறிந்தவர்களே, எதற்குச் சிறப்பாக உடை உடுத்த வேண்டும்?' என்று சமாளித்தார்.
மற்றொரு முறை அவர் பக்கத்து ஊரில் ஒரு அறிவியல் மாநாட்டிற்கு செல்லத் தயாராகினார். மீண்டும் அவர் மனைவி, 'சிறப்பாக உடை உடுத்தி சொல்லலாம் அல்லவா?' என்று முணுமுணுத்தார். அதற்கு ஐன்ஸ்டீன், 'அந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் நான் யார் என்பதை அறியாதவர்கள். அவர்களுக்காக நான் ஏன் அழகாக உடை உடுத்த வேண்டும்?' என்று கூறினார்.

வீட்டு முகவரியை மறந்த ஐன்ஸ்டீன்


ஐன்ஸ்டீன் பிரபலம் அடைந்த பிறகு பல ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்ப வேண்டிய சமயத்தில், தன் இல்லத்தின் முகவரியை மறந்துவிட்டார்.
எப்படியாவது வீடு சென்று சேர வேண்டும் என்று எண்ணியபடி வழியைத் தேடினார். அவர் கண்ணில் கார் ஓட்டுனர்கள் தென்பட்டனர். அதில் ஒருவரிடம் சென்றார். ஆனால், அவர் ஐன்ஸ்டீனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 

தொடர்புடைய பிற கதைகள் : 


ஓட்டுனரிடம், 'இங்கு ஐன்ஸ்டீனின் வீடு எங்கே உள்ளது, உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார். 'நிச்சயமாக நான் அறிவேன். இந்த ஊரில் அவர் வீட்டு முகவரி அறியாதவர் இருக்க முடியாது!' என்று கூறினார் ஓட்டுனர். 
'உங்களுக்கு ஐன்ஸ்டீனை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா?' என்று கேட்டார் ஐன்ஸ்டீன். 'ஆம்' என்றார் ஓட்டுனர். 'நான் தான் ஐன்ஸ்டீன்! என்னை வீட்டில் சேர்த்து விடுங்கள்' என்றார் ஆல்பர்ட். 
திகைத்துப் போனார் ஓட்டுனர்.

சார்பு கோட்பாட்டின் நகைச்சுவையான விளக்கம்


தன் வாழ்நாள் முழுவதும் சார்புக் கோட்பாட்டு விதி (Theory of Relativity) -யை உலகிற்கு உணர்த்த முயற்சி செய்துகொண்டே இருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால், அந்தக் கோட்பாட்டைப் பலராலும் புரிந்து கொள்ள இயலவில்லை.
அதை மிகவும் எளிமையாக விளக்க இவ்வாறு ஒருமுறை கூறினார், 'ஒரு சூடான அடுப்பில் ஒரு நிமிடம் கை வையுங்கள், ஒரு நிமிடம் ஒரு மணி நேரம்போலத் தெரியும். உங்களுக்குப் பிடித்த பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசுங்கள், ஒரு மணி நேரம் ஒரு நிமிடம்போலத் தெரியும்' என்றார். உண்மைதானே??? 
அவரின் அறிவுக்கு இணை அவர் மட்டுமே. உலகிலயே அதிகமான IQ -வை பெற்றிருந்தார். அவரது மூளை இன்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.   
நண்பர்களே! இன்றைய தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும்பல சுவையான கதைகளைத் தெரிந்துக் கொள்ள 'Tamil Stories 4 Everyone' குழுவில் உறுப்பினராக இணைந்திடுங்கள்!  


Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை