ADHD என்றால் என்ன? I ADHD meaning in Tamil l அட இவர்களுக்கும் ADHD இருக்கா!

 வணக்கம் நண்பர்களே! இன்று பரவலாக பேசப்படும் ஒரு மருத்துவச் சொல் 'ADHD'. ADHD என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகளை என்ன? அட இவங்களுக்கு ADHD- ஆ! என்று ஆச்சிரியப்பட வைக்கும் சில பிரபலங்கள் பற்றியும் காண்போம்.

Girl with ADHD



ADHD என்பது Attention Deficit/ Hyperactivity Disorder

அதாவது,

  • கவனம் செலுத்துவதில் அதிக சிரமும் (Attention Deficit)
  • அதிவேக தன்மையுடன் செயல்படுத்தல் (Hyperactivity)
  • எதிலும் ஒரு அவசரம் காட்டும் தன்மை (impulsiveness)

    போன்றவற்றை ஏற்படுத்தும் மூளையின் குறைபாடு.

இது நமக்கும் இருப்பது போல உங்களுக்கும் தோன்றினால், அதில் தவறில்லை எனக்கும் அப்படி தான் தோன்றியது. 

ஆனால், இவை நமக்கு அவ்வப்போது வந்து சென்றுவிடும். ADHD கண்டறியப் பட்டவர்களுக்கு, இது நிரந்தரமான ஒன்று.

அவர்களால் எதிலுமே கவனம் செலுத்தவோ, சிறிது நேரம் ஒரு இடத்தில் அமைதியாக அமரவோ முடியாது.

இந்த ADHD முதன் முதலில் குழந்தைப் பருவத்திலே கண்டறிய முடியும். பின்பு அது அவர்கள் வளர்ந்த பின்பும் தொடரும்.

ADHD ஒரு குறைபாடா?

ஆமாம். மூளையில் ஏற்படும் ஒரு சில இரசாயன குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், அதன் அறிகுறிகள், வளர வளர குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

யார் யாருக்கு ADHD வருவதற்கு வாய்ப்பு?

இந்த ADHD மூளையின் செயல்பாடும் கட்டமைப்பும் முழுமை பெறுவதற்குள் பிறக்கும் குழந்தைகளிடம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மேலும், மூளை சார்ந்த பகுதியில் ஏதேனும் அடிபட்டாலும் ADHD ஆக மாற வாய்ப்பு உண்டு.

இவை அன்றி பரம்பரை வழியாக இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ADHD நீ என்ன புலியா?😎

இப்படி ADHD பார்த்து கேட்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டிய பல ஜாம்பவான்கள் இவ்வுலகில் உண்டு.

ADHD (diagnose) கண்டறியப் பட்டாலும், அதையும் தாண்டி வென்று காட்டிய மனிதர்கள் பலர்.

1. Bill Gates 

எனக்கும் அதே ஆச்சரியம் தான். பில் கேட்ஸ் -க்கு ADHD உள்ளது. அதன் விளைவாக தான் அவர் Havards கல்லூரியில் இருந்து தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார்.

இது தான் அவர் Microsoft நிறுவனத்தை தொடங்க முதல் புள்ளியாக இருந்தது.

2. Albert Einstein

இவருக்கும் ADHD அறிகுறிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அதோடு அவர் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த காரணமாக இருந்தது என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

3. John F Kennedy

அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் John F Kennedy, இவரும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் ADHD-ஆல் பாதிக்கப் பட்டவர், ஆனால் பின்னாளில் சிறந்த அரசியல் பிரபலம் ஆனார்.


ADHD என்பது ஒரு குறைபாடு தான், ஆனால் வாழ்கையில் வெற்றி பெற தடை அல்ல.

அதை கண்டறிந்து சரியாக கையாண்டால் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர்கள் சில உதாரணம்.

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை