Posts

Showing posts from October, 2019

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Image
வணக்கம் நண்பர்களே! மனதை உருக வைக்கும் ‘Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு ’ கதையைப் படிக்கத் தயாராகுங்கள்! இரு நண்பர்கள்   'ராம் ரவி' என இரு நண்பர்கள். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். 20  வருடங்களாகப் பக்கத்து பக்கத்து வீடு. பள்ளி முதல் கல்லூரிவரை ஒன்றாகப் படித்து வந்தனர். ரவிக்கு யாரும் இல்லை. அவன் சிறு வயதில் ஒரு விபத்தில் அவன் குடும்பத்தினர் இறைவன் அடி சேர்ந்தனர், ரவி மட்டும் தப்பித்தான். ராமின் குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து வந்தான். கடைசி வரை உடன் இருப்பதாக இருவரும் தங்களுக்குள்ளே சத்தியம் செய்துக் கொண்டனர். எந்த நேரமும் ஒன்றாகச் சுற்றுவார்கள் எல்லா செயல்களையும் ஒருவருக்கொருவர் உதவிச் செய்து முடிப்பர். ஒருவருக்கு பிரச்சனை வந்தால் அதைத் தன் பிரச்சனைபோல முன் நின்று எதிர்கொள்வார் மற்றொருவர். புதிய நண்பன் ஆகாஷ் இவர்களின் நட்பைக் கண்டு வியந்து போகாதோர் அந்த ஊரில் இல்லை. இருவருமே தங்களின் நட்பைக் கண்டு பெருமிதம் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் தான் அவர்களின் வீட்டிற்கு அருகே குடி வந்தான் ஆகாஷ். இவர்களின

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Image
ஹலோ நண்பர்களே! 'நகைச்சுவை' மனிதர்களுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரு மிகப் பெரும் வித்தியாசம். நான் படித்து ரசித்த  அதிரடியான ஒரு நகைச்சுவை கதை Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | comedy   நீங்கள் வாசிக்கத் தயாராக உள்ளது. படித்து மகிழுங்கள்! வந்தா 5௦௦௦ போன 50 ! விமானம் எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது. இன்னும் நகரவில்லையே..... எனப் பலரும் கைக்கடிகாரத்தை பார்த்துக்  கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் அந்தப் பெண். விமான நிலையத்தை அடைய நெடுந்தூரம் பயணித்த சோர்வு கண்களில்  இருந்தது. 'விமானம் பறக்கத் தொடங்கினால் சற்று கண் அயர்ந்து தூங்கலாம்' என வெறிக்க வெறிக்க 'விமானத்தின் வாசல் மூடுமா?'  என்று பார்த்தவண்ணம் இருந்தாள். அனைவரின் பதைபதைப்பிற்கும் முற்று புள்ளி வைக்கும் வண்ணம், வியர்வை சொட்ட சொட்ட ஏறினார் ஒரு நடுத்தர வயதுடைய  ஆண். விமானத்தில் இருந்தோர் அனைவரும் 'நீதனா அது?' என்று அவரைக் கண்களிலே எரிக்கும் வண்ணம் கண்டனர். என்ன  முகபாவனை தருவது என்றே தெரியாமல் அவர் குற்ற உணர்ச்சியோடு வெட்கத்தில் சிரித்துக் கொண்டே நுழைந்தார். ஒரு வழ

Tamil blogs | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா?

Image
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை ' Tamil blogs | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? '  படிக்கத் தயாராகுங்கள்! அது ஒரு அழகிய ஊர். அங்கு எல்லா விதாமான வளங்களும் நிறைந்து இருந்தது. வெள்ளி நீரோடை, பச்சை பசேலென வயல்கள், கால காலத்தில் பெய்திடும் மழை, சூரிய சக்தியின் ஆசிர்வாதம், சில்லென மனதை மயக்கும் காற்று என இயற்கையின் அருள் நிறைந்த ஊர் அது. மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த அந்த ஊரில், பேராசை கொண்ட மில் காரன் ஒருவனும் இருந்தான். செல்வங்களுக்குக் குறைவில்லை எனினும் அவனுக்குள்ளே இருந்த பேராசை தீ இன்னும் எரிந்துக் கொண்டே இருந்தது. மக்கள் பலரை ஏமாற்றி செல்வத்தையும் நிலங்களையும் வயல்களையும் சேர்த்த வரலாறும் அவனுக்கு உண்டு. அவன் மில் -இல் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் குறைந்த ஊதியம் தந்து ஏமாற்றி வந்தான். பணக்காரன் என்பதால் யாரும் அவனைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை.  பஞ்சம் பிழைக்க வந்த சகோதரர்கள் வளங்கள் நிறைந்த ஊர் என்பதால், பிற ஊர் மக்களும் பஞ்சம் பிழைக்க இந்த ஊர் தேடி வருவது வழக்காமான ஒன்று தான். அப்படி வந்த மக்களில் பலர் அந்த மில்

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Image
வணக்கம் நண்பர்களே! கதைகள் மனித வாழ்வை மேம்படுத்தும். வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளை கூறும்  Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்  இன்று பகிர்ந்துள்ளேன்... -------------------------------------------------------------------------------------------------------------------------- 1. துறவி கேட்ட கேள்வி ?! அது ஒரு அழகிய ஊர். அங்கு வயது முதிர்ந்த துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அறிவுக்கும் ஞானத்திற்கும் ஈடு அவர் மட்டுமே. ஊரில் வரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கைத்தேர்ந்தவர்.  அவரின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்கக் கூட்டம் எப்பொழுதும் கூடிகொண்டே இருக்கும். அவரின் ஆலோசனை தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதால், கல்வி கற்காத பாமரனும் செல்வந்தர்களும் அவரைக் காண வந்த வண்ணமே இருந்தனர். அவர் அந்த ஊருக்கு வந்து 1௦ வருடங்கள் நிறைவுற்றது. அந்த ஊரின் மக்கள் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை. துறவிக்கு மனதில் ஒரு வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் தன்னை வந்து சந்திப்பதையும் கருத்துகளைக் கேட்பதையும் அவர் விரும்பினாலும், தங்கள் வாழ்

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை

Image
வணக்கம் நண்பர்களே! 'விதியை மதியால் வெல்லலாம்' என்ற பொன்மொழியைக் கேள்விப் பட்டிருப்போம். '  Tamil blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை   ' கதை, அதைக் குழந்தைகளுக்கு விளக்க உதவும். -------------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு மூட நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். காலையில் அவர் யார் முகத்தைப் பார்த்து  விழிக்கிறாரோ அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தே அந்த நாள் அமையும் எனக் கண் மூடித் தனமாக நம்பினார். அந்த நாள் இனிய நாளாக அமையவில்லை என்றால் காலையில் யார் முகத்தில் விழித்தாரோ அவரை நாடு கடத்தி விடுவார்.  எப்பொழுதும் தான் அதிர்ஷ்டம் கொண்டவர் எனத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விழிப்பதே வழக்கம். எனினும் சில பொழுதுகளில் எவரேனும் மாட்டிக்கொள்வதுண்டு. சின்னத் தீவு அந்த நாட்டிலிருந்து கடல் தாண்டி ஒரு சின்னத் தீவு இருக்கும். அந்தத் தீவுக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லாதவர்களை நாடு  கடத்துவது வழக்கம். அங்குப் பல மிருகங்கள் சுற்றி திரியும். அவை ந