Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey

ஒரு அழகிய காலை வேளை. ஊருக்கு வெளியே பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சூரியன் தன் கதிர்களால் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார். சூரியனின் கதிர்கள் அந்த ஆற்றின் மீது பட, தங்கத்தை உருக்கி ஊற்றியது போல ஓடியது. அந்த ஆறு தவழ்ந்து செல்லும் வழியில் பச்சை பசேலெனச் செடி கொடிகள். மனிதனின் மனதை மயக்கி அமைதி தரும் அழகிய காட்சி. அந்த நேரம் அதன் வழியாகச் சென்றுக் கொண்டிருந்தது ஒரு கார். அதுவரை நிற்காமல் ஊரை நோக்கிப் பயணித்த கார் திடீரென நின்றது. அந்தக் காரிலிருந்து ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர் இறங்கினார். அதோடு முடியவில்லை அந்தக் கார் பெருமூச்சி விடும் அளவிற்கு தொடர்ந்து ஆட்கள் அதிலிருந்து இறங்கினார்கள். ஒரு வழியாகக் கடைசியாக ஒருவர் காரின் கதவை மூடினார். அவர்கள் அனைவரும் பண்டிதர்கள். அந்த ஊரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு இறைவனை தரிசிக்க சென்றுக் கொண்டிருந்தனர். சரியாக மொத்தம் 10 பண்டிதர்கள். அந்தக் காட்சி அவர்களைக் காரை விட்டுக் கீழே இறங்க வைத்துள்ளது. நீராடும் ஆசை அனைவரும் அங்கு ஓடிக்கொண்டிருந்த நீரோடையை நோக்கிச் சென்றனர். தூய்மையான அ...