Posts

Showing posts from December, 2019

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

Image
இரவு நேரம் 2 போலீஸ் அதிகாரிகள்; அர்ஜுன் மற்றும் அவரின் உதவியாளர் பிரவீன். அந்த ஊரின் அருங்காட்சியகம் நோக்கிச் சென்றனர். அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ‘வணக்கம் சார்’ என அங்கு ஏற்கனவே கூடி இருந்த சில காவலர்கள் இருவரையும் வரவேற்றனர். இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அர்ஜுன் உத்தரவிட்டார்.   அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரண்டு பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் சில வைரங்களைக் கொள்ளையர்கள் திருடி விட்டனர். இதைக் கவனித்து போலீசுக்கு அங்கிருந்த அருங்காட்சியகத்து காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய நபர்கள் நடந்தவற்றை போலீஸ் கேமராவில் அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் பார்த்தனர். அங்கிருந்த நுழைவு வாயில் கேமராவுக்கு நேராக வந்த ஒரு முகமூடி அணிந்த திருடன், அந்தக் கேமராவை உடைத்தான். பின்பு நேராகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அந்தத் திருடன் அருங்காட்சியகத்தின் அனைத்து கேமராக்களையும் நிறுத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்தனர். அவர்கள் சந்தேகப்படு

Tamil blogs | சித்திரமும் கைப்பழக்கம்! | Practice makes a man perfect - story

Image
ஒரு ஊரில் சின்னப் பையன் ஒருவன் வாழ்ந்து வந்தான், பெயர் ராமு. அவனுக்கு ப்ருஸ் லீ ( Bruce Lee ) போலப் பெரிய சண்டை வீரனாக வேண்டும் என்று ஆசை. அவன் தன் முடிவில் மிகவும் தெளிவாக இருந்தான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் தன் ஆசையைப் பெற்றோர்களிடம் கூறினான். அவர்களும் அவன் கொண்டிருந்த ஆர்வத்தை தடுக்கவில்லை. அவனை மேலும் ஊக்கப்படுத்தினர். சண்டை வீரனாவதற்க்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் தயாராக இருந்தனர். அவன் சண்டை பயிற்சிக்கென இருக்கும் முழு நேர கல்லூரியில் சேர்ந்து அவ்விடமே தங்கி கற்றுக் கொள்ள விருப்பப்பட்டான். அதைத் தன் வீட்டில் உள்ளவர்களிடமும் கூறினான். அவர்கள் சற்று தயங்கினர். ‘ராமு அந்தக் கல்லூரிகளில் சேர்ந்தால் பல ஆண்டுகள் நீ அங்குத் தான் இருக்க வேண்டும். எங்களைக் காணுவதற்கான பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவே. உன்னால் பல ஆண்டுகள் பயிற்சி மட்டுமே செய்துக் கொண்டு வாழ இயலுமா?’ என்று கேட்டனர். ராமு தெளிவாக இருந்தான், ‘இவை அனைத்தையும் நானும் அறிவேன். நன்கு சிந்தித்த பின் தான் உங்களிடம் கேட்கிறேன். என்னால் இதைச் செய்ய முடியும். என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களைக்

Tamil blogs | நேர்மையான கடத்தல்காரன்! | Funny short story of an honest smuggler

Image
ஒரு ஊரில் கடத்தல்காரன் ஒருவன் இருந்தான். மற்ற கடத்தல் காரர்களை போல இல்லாமல் சற்று விநோதமானவனாக இருந்தான். தன்னை ஒரு ‘நேர்மையான கடத்தல்காரன்’ என்றுக் கூறி வந்தான். கடத்தல் நேர்மையற்ற தொழிலாக இருக்கும்பொழுது அவன் தன்னை நேர்மையானவன் எனக் கூறி கடத்தல் செய்வது வியப்பாக இருந்தது. தான் கடத்தல் தொழில் செய்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வான். அவ்வளவு என்ன காவலர்களுக்கே தெரியும் அவன் கடத்தல்காரன் என்று. ஆனால் இன்று வரை எந்தக் காவலர்களாலும் அவன் செய்யும் கடத்தலை தடுத்து நிறுத்த முடிந்தது இல்லை. அதற்குக் காரணம் அவன் என்ன கடத்துகிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயன்றதில்லை. தினமும் விடியற்காலையில் கழுதையுடன் நாட்டின் எல்லையைத் தாண்டிச் செல்லுவான் பொழுது சாயும் வேளையில் சில சரக்குகளை ஏற்றி வருவான். புதிய காவலர் ஒரு நாள் அந்த ஊருக்குப் புதிய காவலர் ஒருவர் பணி புரிய வந்தார். இதற்கு முன்பு அவர் வேலை செய்த அனைத்து ஊரிலும் நடந்த கடத்தலை எளிமையாகக் கண்டுபிடித்துப் பல பரிசுகளைப் பெற்றவர் அவர். அந்த ஊரின் எல்லை பகுதியில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். அந்த ஊருக்கு வந்தவுடனே

Tamil blogs | இரண்டு தவளைகள்! | Short moral story of 2 frogs on motivation

Image
மிகவும் ஆழமான கிணறு ஒன்றில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. இரண்டும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்தன. கிணற்றின் ஓரம் ஏறி மேலே வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தன. ஆனால் அங்கு இருந்த ஈர பததித்தின் காரணமாக இரண்டு தவளைகளும் வழுக்கி வழுக்கி உள்ளே விழுந்துக் கொண்டிருந்தன. இரண்டு தவளைகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தகவல் அங்கிருந்த அனைத்து தவளைகளுக்கும் தெரிய வந்தது. அனைத்து தவளைகளும் ஒன்றுக் கூடி கிணற்றின் அருகே வந்தது. ஆனால் அந்தத் தவளை கூட்டம், அந்த இரு தவளைகளுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக இரு தவளைகளிடமும், ’ஏன் வீணாக முயற்சி செய்துக் கொண்டிருகிறீர்கள்? உங்களால் இது முடியாது. உங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுங்கள். மரணம் தான் உங்கள் முடிவு’ என்று கூச்சலிட்டது. இரு தவளைகளும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தன. தவளை கூட்டம் விடுவதாக இல்லை, ‘இந்தக் கிணறு மிகவும் ஆழமானது. இதன் சுவறுகளின் ஈரப்பதத்தை எந்தத் தவளைகளாலும் வெல்ல முடியாது. வீண் முயற்சியை விட்டுவிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கத்தியது.

Tamil blogs | ஹோட்ஜாவின் கதைகள்! | short story collection of hilarious Hodja

Image
நகைச்சுவை கதைகள் பல நாம் கேள்விப் பட்டிருப்போம். அவற்றுள் ஹோட்ஜாவின் கதைகளும் ஒன்று. மூன்று சிறிய ஹோட்ஜா கதைகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. 1. ஹோட்ஜவுக்கும் மனைவிக்கும் சண்டை! ஒரு நாள் ஹோட்ஜாவிற்கும் அவர் மனைவிக்கும் சண்டை. வாக்கு வாதம் முற்றி வீட்டை விட்டு வீதிவரை வந்து சண்டை போட ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்தில் கோபத்தில் ஹோட்ஜாவின் மனைவி பக்கத்து வீட்டிற்குள் சென்று விட்டாள். பக்கத்து வீட்டுகாரர் இனிப்புக் கடை வைத்திருப்பவர், ஹோட்ஜாவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இவ்வாறு சண்டை போடுவதை பார்த்து அவரும் அவர் மனைவியும் அவர்களைச் சமாதானப் படுத்த முயற்சி செய்தனர். இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, இனிப்புப் பலகாரங்கள் கொடுத்துப் பேசிக் கோபத்தை தனிய வைத்தனர். ஹோட்ஜவிற்கும் மனைவிக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த வாக்கு வாதம் சற்று தணிந்தது. இருவரும் அமைதியாக வீட்டிற்கு சென்றனர். ஆனால் அது கொஞ்ச நேரம் கூடத் தாங்கவில்லை. மீண்டும் இருவருக்கும் வாக்கு வாதம் தொடங்கியது. ஹோட்ஜாவின் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்லத் தயாராகினாள். அவ்வளவு வாக்கு வாத