Tamil blogs | செல்போன் அழைப்பு | interesting short story 'A phone call'

நண்பர்களே! இன்று சற்று நகைச்சுவையான கதையோடு Tamil blogs | செல்போன் அழைப்பு | interesting short story 'A phone call' வந்துள்ளேன். படித்து மகிழுங்கள்!

Phone image in Tamil blog


சிலர் ஒன்றாகக் கூடி கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேர மகிழ்ச்சியான விளையாட்டிற்கு பின், வியர்த்து விறுவிறுத்து பசியோடு அங்கிருந்த உணவகத்தில் கூடினர்.

சட்டென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. மேஜை மீது இருந்த அந்தச் செல்போனின் பச்சை பொத்தானை அழுத்தினார் ஒருவர். உணவு உண்டு கொண்டிருந்ததால் அவர் கைப்பேசியின் லவுட் ஸ்பீக்கர் பொத்தனை அழுத்திப் பேசத்தொடங்கினார்.

மனைவி: ஹலோ! என்னங்க நான் என் தோழியோடு மால்-க்கு போறேன்னு நேற்று உங்களிடம் சொன்னேன்ல. அங்கு வந்து விட்டோம். எனக்குப் பிடித்தவற்றை வாங்கி கொள்ளவா?

அவர் : சரி மா! வாங்கிக்கோ.

மனைவி: என்னங்க, இங்கே ஒரு அழகிய ஆடை இருக்கு. பல நாட்களாக வாங்கித்தாங்கன்னு கேட்டேன்ல ஒரு மாடல், அது இங்கே இருக்கு. அதன் விலை 15,௦௦௦ ரூபாயாம்..... நிறம், அளவு எல்லாமே நான் எதிர்பார்த்தபடி இருக்கு வாங்கிக்கவா…?

அவர் : வாங்கிக்கோ.

[ஒரு ஆடைக்கு 15,௦௦௦ ரூபாயா என்று சுற்றி இருந்தவர்கள் திரு திருவென விழித்தார்]

மனைவி : என்னங்க, இன்னொரு விஷயம்.... என் தோழி மாலா இருக்கால, அவள் என்னோடு கடைக்கு வந்த அவளுக்கும் ஒரு ஆடை எடுத்துத் தர வேணும் சொன்னா, நானும் வாங்கி தரேன் வாடிச் சொல்லிட்டேன். அவளுக்கு 2௦௦௦ ரூபாய்ல ஒரு ஆடை வாங்கி தரட்டுமா?

அவர் : சரி சரி! மாலாக்கு தானே வாங்கி கொடு.

மனைவி : என்னங்க, இங்க அந்த ஆடையைப் பார்த்தேனா... அது பக்கத்திலேயே ஒரு சின்ன மேக்கப் கிட், கைக்கு அடக்கமா... அழகா... இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. விலை 5௦௦௦ ரூபாய் தானாம் -ங்க. திரும்பி இப்படி கிடைக்குமா தெரியல....

அவர் : [நண்பர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு] உனக்குப் பிடிச்சிருக்கா? அப்போ வாங்கிக்கோ

மனைவி : ரொம்ப சந்தோஷம் -ங்க

அவர் : சரி அப்போ நான் போன வைக்கட்டுமா?

மனைவி : இல்லைங்க இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன்...

அவர் : என்னது சொல்லுமா?

மனைவி : புத்தம் புதிய கார் மாடல் ஒன்று வந்திருக்கு. இந்த மாலில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக 25% தள்ளுபடி இருக்காம்.

அவர்: 25% தள்ளுபடியா? அப்போ எவ்வளவு ரூபாய் முன் பணம் செலுத்தனும்?

மனைவி : 25 லட்சம் -ங்க ...

அவர் : 25 லட்சமா? கார் நல்லா இருக்கா? எல்லாம் நல்லா விசாரிச்சுட்டியா?

மனைவி : நல்லா விசாரிச்சுட்டேங்க. அருமையான கார்; நிறம், திறன், செயல்பாடு எல்லாம் நல்லா இருக்கு. நீங்கச் சரின்னு ஒரு வார்த்தை சொன்னால், அப்படியே முன் தொகையைச் செலுத்தி வீட்டுக்கே ஓட்டிட்டு வந்துடுறேன்.

அவர் : நீ கேட்டு நான் ஏதாவது வேணாம் சொல்லியிருக்கேனா? வாங்கிக்கோ...

[அதைக் கேட்ட நண்பர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். நாம் முன்னே இருப்பதால் ரொம்ப பில்டப் பண்றாரா என்று சந்தேகத்துடன் அவனைப் பார்த்தனர்]

அவர் : இன்னும் ஏதாவது இருக்கா? நான் உணவு உண்டு கொண்டிருக்கிறேன்... நண்பர்கள் அனைவரும் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.

மனைவி : அடடா... என்னிடம் முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. நான் வேகமாகப் பேசி முடித்திருப்பேன். என்னை மன்னிச்சிருங்க...

அவர் : அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல -மா. சரி, நான் அப்புறம் பேசுறேன்.

[என்று பேச்சை நிறுத்தினான். அனைவரும்அவனை வினோதமாகப் பார்த்தனர். ஒரே நாளில் இவ்வளவு செலவா என்று தங்கள் மனதிற்குள் எண்ணிக் கொண்டனர். கைப்பந்து கிளப்பில் புதிதாகச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால், மனைவியிடம் பேசியதை வைத்து நிச்சயம் பெரிய பணக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினர்]

மீண்டும் செல் போன் ஒலித்தது. லௌட் ஸ்பீக்கரை மீண்டும் அழுத்தினார்.

மனைவி : என்னங்க, கடைசியா ஒன்னே ஒன்னு...

அவர் : கார்டில் இன்னும் காசு இருக்கா? என்ன வேணும் சொல்லு -மா?

மனைவி : திரும்பி வந்து கொண்டு இருந்தபோது, பக்கத்து கடையில் ஒரு அருமையான ஆஃபர் போட்டிருக்காங்க. அதான் உங்களைக் கேட்கலாம்னு...

அவர் : இது வேறா? சரி... என்ன ஆபர்?

மனைவி : ஏசியும் டிவியும் வாங்கினால், பிரிட்ஜூம் கட்டிலும் இலவசமாம்...

அவர் : அப்படியா எவ்வளவு ஆகிறது?

மனைவி : 20 லட்சம் ஆகும். ஆனால், இரண்டு பொருட்கள் இலவசம்...

அவர் : 20 லட்சமா? 18 லட்சத்திற்கு தருவாங்களா? என்று கேட்டுப் பார். இல்லையென்றால் 20 லட்சத்திற்கு வாங்கிக்கோ -மா

மனைவி : சரிங்க

[என்று ஒரு வழியாகப் பேச்சை நிறுத்தினாள். சுற்றியிருந்த அனைவர் மனதிலும் யார் இவர்? மனைவிக்காக இவ்வுளவா? என்று வியந்தனர்]

பேச்சை முடித்த அவர் உணவருந்திவிட்டு சுற்றி இருந்தவர்களிடம்,

அவர் : இது யாருடைய செல்போன்? நீங்கள் யாராவது அறிவீர்களா?

என்று சிரித்தார்...

சுற்றியிருந்த அனைவரும் ஆச்சிரியத்தில், 'அப்போ....? அதில் பேசியது...?'

பிற நகைச்சுவை கதை : Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை 

அவர் : யார் என்று எனக்குத் தெரியாது? செல்போன் ஒலித்தது யாரும் எடுக்காததால் எடுத்தேன்... ஆனால், பேசியவர் மனைவிபோலத் தெரிகிறது...  தன் கணவனின் குரலுக்கும் வேறொருவரின் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், வாங்குவதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார். சரி, நாமும் பொழுதுபோக்கிற்காக அவரோடு பேசுவோம் என்று உரையாடிக் கொண்டிருந்தேன். யார் அந்தப் பாவப்பட்ட கணவனோ?

என்று நமட்டு சிரிப்பு சிரித்தார்.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே தங்கள் செல்போன் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்டனர்.

உங்கள் வாழ்விலும் இப்படியொரு நண்பர் உள்ளாரா? அவருக்கு இந்தக் கதையைப் பகிருங்கள்!

மேலும் பல கதைகளை அறிந்துக்கொள்ள பெல் பொத்தானை அழுத்தவும். Please click bell icon for new stories. our site is 100% trustable we send you only secure notiications. Thank you!


Comments

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை