Posts

Showing posts from May, 2020

Tamil blogs | குணமா? பணமா? பகுதி -2 | Story of adamant rich woman part 2

Image
வணக்கம் நண்பர்களே! சென்ற கதையில், [Part 1 : Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman ] வரிசையில் நிற்கமால் ஆய்வாளரிடம் சண்டை போட்டு ஆணவத்தோடு விமானம் ஏறிய அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்த்தோம். விமானத்தில் தன் அருகில் உள்ள ஏழை பெரியவரை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் விமானம் புறப் பட அனுமதிப்பேன் என்று பிரச்சனை செய்தாள். இனி நடப்பவையை காண்போம்! பணிப் பெண்ணின் பணிவு : 'மேடம், சிரமத்திற்கு  வருந்துகிறோம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது' என்றாள் பணிப்பெண். 'பொறுத்துக் கொள்ள வேண்டுமா? நானா? என்னைப் பொறுத்துக் கொள்ளும் படி வலியுறுத்த நீ யார்? என்றாள் ராணி. பணிப்பெண், 'சரி உங்களுக்கு என்ன தான் வேண்டும் ? என்ன செய்தால் விமானம் புறப்பட அனுமதிப்பீர்கள்?' என உபாயம் கேட்டாள். உடனே, 'இந்த முதியவரை வேறிடத்திற்கு மாற்றங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியாகப் பயணம் மேற்கொள்ள இயலும்' எனக் கர்வத்தோடு கூறினாள் ராணி. இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர், மிகுந்த மனவேதனை அடைந்தார்.

Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 2 | Wise old Woman part 2

Image
வணக்கம் நண்பர்களே! ' Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 2 | Wise old Woman part 2 ' கதைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. பார்வை இழந்த பாட்டி என்பதால் அவரை இழிவாக எண்ணிய மேலாளர், அவரிடம் ஒரு கோடி இருப்பதை அறிந்தவுடன் வாயைப் பிளந்தார். இனி நடப்பவையை மிகவும் சுவாரஸ்யமானவை.

Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman

Image
நண்பர்களே! மீண்டும் ஒரு புதிய கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. கதைகளை அதிகம் படிக்கப் படிக்கக் கற்பனை வளம் மேம்படும். உலகத்தைப் புதியதொரு கோணத்தில் பார்க்கும் கலையை வளர்க்கும். ஆனால் இன்று வளர்ந்து வரும் வீடியோக்களால் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. உங்களைப் போன்று இன்னும் சிலரால் இந்தப் பழக்கம் காப்பாற்றப் பட்டுள்ளது ;) இன்றைய கதை ' Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman ' உங்களுக்காகக் காத்திருகிறது! பையுடன் பாட்டி   கிட்டத்தட்ட 70 வயது இருக்கும் அந்த மூதாட்டிக்கு. கையில் தூக்கமுடியாமல் ஒரு பையைச் சுமந்து கொண்டு சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். பை என்றால் மஞ்சள் பையையோ துணிப்பையையோ கற்பனை செய்து விடாதீர்கள், பாட்டிதான் பழசு பைப் புத்தம் புதிய விலை உயர்ந்த சூட்கேஸ். மற்றொரு கையில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தடி ஒன்று வைத்திருந்தார். பாட்டி நேராக ஒரு வழிப்போக்கனிடன் சென்றார். அவனை நிறுத்தி, 'தம்பி இங்க வலஜா வங்கி இருக்காமே. எனக்குக் கண்ணு தெரியாது. கொஞ்சம் வங்கி வாசலில் விட்டு விடுகிறாயா?' என்று கேட்டார். உதவிய

Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman

Image
வணக்கம் நண்பர்களே! கதைகள் வாழ்வை வளமாக்கும். வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் கதைகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. கேள்விப்பட்ட கதைகளையே மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் அமைகிறது. ஆனால், நமது ' Tamil Stories 4 Everyone Team ' உங்களுக்குப் படிக்க வித்தியாசமான கதைகளை அளிப்பதில் பெருமை கொள்கிறது. இன்று ஒரு சுவையான கதையோடு " Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman" வந்துள்ளேன். படித்து மகிழுங்கள்! பணக்கார பெண் : விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் தங்கள் விமானத்தில் ஏறப் பயணச்சீட்டை சரி பார்க்கக் காத்துக் கொண்டிருந்தனர். அப்படி அனைவரும் வரிசையில் நின்று பொறுமை காத்து கொண்டிருந்த நேரம், ஒரே ஒரு பெண் மட்டும் வரிசையில் நிற்காமல் நேராக ஆய்வு செய்யும் இடத்திற்கு வந்து தனது பயணச்சீட்டை நீட்டினாள். வரிசையில் நிற்பவர்கள் அனைவருக்கும் கோபம் வந்தது. எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பயணசீட்டு ஆய்வாளர், 'வரிசையில் வந்து நில்லுங்கள். அதுதான் சரி. அப்பொழுது தான் நான் உங்கள் சீட்டைச் சரி பார்ப்பேன்' என்றார். வரிசைய

Tamil blogs | புல்லும் சொற்பொழிவும் | Funny story of a speaker

Image
வணக்கம் நண்பர்களே! கொரோனாவோடு வாழ்க்கை எப்படி போகிறது? சற்று நேரம் நகைச்சுவை பக்கம் செல்வோம். இன்று ஒரு அருமையான நகைச்சுவை கதை 'Tamil blogs| புல்லும் சொற்பொழிவும் | Funny story of a speaker' உங்களுக்காகத் தயாராக உள்ளது. படித்து மகிழுங்கள்!  ஒரு ஊரில் சொற்பொழிவாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் சொற்பொழிவின் மீது அதிக கர்வம் கொண்டவர். பிறரை விடத் தனது சொற்பொழிவே சிறந்தது, தனக்கு மதிப்பு அதிகம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.  எந்த ஒரு சொற்பொழிவாளருக்கும் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய திறன் ஒன்று உள்ளது. அதுவே, மக்களின் மனதை புரிந்து கொள்ளும் பண்பு. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் விட்டால், சொற்பொழிவைக் கேட்காமல் உறங்கி விடுவர்.  (உங்களுக்கும் உறக்கம் வருகிறதா;) ? சரி, வேகமாகக் கதைக்குச் சென்று விடுவோம்)  சொற்பொழிவாளர் தேனப்பன் அந்தச் சொற்பொழிவாளரை, மேட்டுக்குடி கிராம மக்கள் நேரில் சந்தித்து தங்கள் ஊர் திருவிழாவில் சொற்பொழிவு ஆற்றும்படி வேண்டினர். (சொற்பொழிவாளர் என்று ஒவ்வொரு முறையும் கூற கடினமாக உள்ளது. பெயர் வைத்துவிடுவோம். இனி அவர் பெயர் தேனப்பன்! உங்களுக்க

Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien

Image
வணக்கம் நண்பரகளே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று ஒரு கதை அல்ல பல கதைகள்.  புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை ' Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien ' தொகுத்து வழங்கி உள்ளேன்.  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இரயில் பயணம் ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கல்லூரி ஒன்றில் சிறப்புரையாற்ற சென்றுகொண்டிருந்தார். அந்த ரயிலில் இருந்த அனைவருக்கும் ஐன்ஸ்டீனை தெரியும். அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கையொப்பம் வாங்கவும் முயற்சி செய்தனர். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்பே, அவருக்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் அவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவியிருந்தது.  ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண்டு இருக்க, பயணச்சீட்டு சரிபார்க்க ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அனைவரும் தங்கள் பயணச்சீட்டை காட்டிக் கொண்டிருந்தனர். ஆய்வாளரைக் கண்டதும் ஐன்ஸ்டீன் தனது சீட்டை எட

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

Image
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு வித்தியாசமான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய கதை  Tamil blogs | பாவத்தைச் சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?  நீங்கள் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கர்மத்தின் பலனையே நாம் அனுபவிப்போம் என்று கூறுவர். அத்தகைய கர்மம் 'இப்படியும் வேலை செய்யுமா?' என்று கர்மத்தின் ஒரு விதியை ஒட்டிய கதையையே இன்று பார்க்கப் போகிறோம். எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் வாக்குவாதம்  ஒருமுறை எமனுக்கும் சித்ரகுப்தனுக்கு ஒரு வாக்குவாதம் வந்தது. முனிவர் இறக்கக் காரணமாக இருந்த ராஜா தான் குற்றவாளி என்றும் அவர் தலையில் பாவச்சுமையை எழுத வேண்டும் என்றும் சித்திரகுப்தன் கூறினார். ஆனால் எமனோ அதை ஏற்க மறுத்தார். 'நீ கூறுவது தவறு. அந்த ராஜா குற்றவாளி அல்ல' என்று வாதிட்டார் எமதர்மன். சித்திரகுப்தன் எமனிடம் நிகழ்ந்தவையை விளக்கினார்.  முனிவரைக் கொன்ற ராஜா பாலைபிரவேசத்தின் ராஜா மிகவும் நேர்மையானவர். தன்னை நாடி வந்தவர்களுக்கு எத்தகைய உதவியும் புரிந்திடும் அன்பானவர். ஒரு முறை அவரின் ராஜ்யத்திற்கு, புகழ்பெற்ற மு