Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman

நண்பர்களே! மீண்டும் ஒரு புதிய கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. கதைகளை அதிகம் படிக்கப் படிக்கக் கற்பனை வளம் மேம்படும். உலகத்தைப் புதியதொரு கோணத்தில் பார்க்கும் கலையை வளர்க்கும்.
ஆனால் இன்று வளர்ந்து வரும் வீடியோக்களால் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. உங்களைப் போன்று இன்னும் சிலரால் இந்தப் பழக்கம் காப்பாற்றப் பட்டுள்ளது ;) இன்றைய கதை 'Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman' உங்களுக்காகக் காத்திருகிறது!

Image in Tamil blog with super lady title text

பையுடன் பாட்டி 

கிட்டத்தட்ட 70 வயது இருக்கும் அந்த மூதாட்டிக்கு. கையில் தூக்கமுடியாமல் ஒரு பையைச் சுமந்து கொண்டு சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். பை என்றால் மஞ்சள் பையையோ துணிப்பையையோ கற்பனை செய்து விடாதீர்கள், பாட்டிதான் பழசு பைப் புத்தம் புதிய விலை உயர்ந்த சூட்கேஸ்.

மற்றொரு கையில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தடி ஒன்று வைத்திருந்தார். பாட்டி நேராக ஒரு வழிப்போக்கனிடன் சென்றார். அவனை நிறுத்தி, 'தம்பி இங்க வலஜா வங்கி இருக்காமே. எனக்குக் கண்ணு தெரியாது. கொஞ்சம் வங்கி வாசலில் விட்டு விடுகிறாயா?' என்று கேட்டார்.



உதவிய இளைஞன்

அவரின் நிலையைக் கண்டு மனம் இறங்கிய இளைஞன், 'இங்கே பக்கம் தான் பாட்டி அந்த வங்கி, வாருங்கள் உங்களை விட்டு விட்டுச் செல்கிறேன்' என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டே அழைத்துச் சென்றான்.

'ஏன் பாட்டி வீட்டில் யாரையும் கூட அழைத்து வரலாம்ல. வங்கிக்குப் போகணும் சொல்றீங்க, கண்டிப்பா பணம் கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருக்கும். உங்களை யாரவது ஏமாற்றிவிட்டால் கஷ்டம் தானே? பார்வையுள்ளவர்களையே ஏமாற்றும் உலகம் இது. அடுத்த முறை யாரையும் கூட்டிட்டு வாங்க' என்று பணிவோடு கூறினான் இளைஞன்.


'கண்டிப்பாகத் தம்பி' என்று ஒரு நமட்டு சிரிப்போடு கூறினார் மூதாட்டி. 'இதோ வங்கி வந்திருச்சு. பத்திரமாகச் சென்று வாருங்கள்' என்று விடை பெற்றுக்கொண்டான் இளைஞன். மூதாட்டி நேராக வங்கி உள்ளே நுழையாமல் வாசலில் நின்றார்.



வங்கியின் காவலாளி

'இந்த வங்கியின் காவலாளி இருக்கிறாரா?' என்று சத்தமாகக் கேட்டார். வாசலில் ஓரமாகத் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார் ஒரு காவலாளி, 'இங்கதான் இருக்கேன். என்ன வேண்டும்?' என்று தேனீர் அருந்திக் கொண்டே கேட்டார்.



மூதாட்டி ஒலி வந்த திசை நோக்கி நடந்தார், 'தம்பி! நீ தேநீர் குடித்து முடித்து விட்டால், ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் எனக்கு' என்றார். காவலாளிக்கு தூக்கிவாறிப்போட்டது. 'பாட்டி, நீங்கள் பார்க்கப் பார்வை இழந்தவர்போலத் தெரிகிறீர்கள். ஆனால், தேநீர் அருந்துவதாகச் சரியா கூறுகிறீர்களே?' எனக் குழப்பத்தோடு கேட்டான்.

மூதாட்டி தனக்கே உரிய சிரிப்புடன், 'ஆமாம் தம்பி சரிதான். பார்வையை சிறுவயதிலேயே இழந்து விட்டேன், ஆனால் அறிவை இழக்கவில்லை. தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது' என்றார்.

காவலாளி, 'ஏதேதோ சொல்றீங்க, சரி என்ன உதவி சொல்லுங்க அம்மா? செய்து தருகிறேன்' என்று கூறினான். 'இந்த வங்கியின் தலைமை மேலாளரை நான் சந்திக்க வேண்டும். அவரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?' எனக் கேட்டார் பாட்டி.

'என்னம்மா இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை!' என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் 'என்ன உதவியானாலும், இங்கே இருக்கும் ஆட்களை வைத்துச் செய்து தருகிறேன். வேலை என்னவென்று கூறுங்கள்?' என்றார் காவலாளி.


அதிகமான பணம்

'இல்லை தம்பி. நான் இந்த வங்கியில் மிக அதிகமான பணம் போடலாம் என்று இருக்கிறேன். கண்டிப்பாகத் தலைமை மேலாளரிடம் பேசிய பிறகே முடிவுக்கு வருவேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டார் பாட்டி.

'அதிகமான பணமா நீங்களா?' என்று சந்தேகத்துடன் 'சரி ஒருமுறை மேலாளரிடம் பேசிப் பார்க்கிறேன்' என மூதாட்டியை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே மேலாளர் அறைக்குச் சென்றான் காவலாளி.
மேலாளரிடம், 'வெளிய ஒரு பார்வையிழந்த வயதான அம்மா, நம் வங்கியில் பணம் போடக் காத்திருக்கிறார். உங்களைச் சந்தித்தே தீர வேண்டும் என்கிறார்' என்றான் காவலாளி.

மேலாளர் சலிப்புடன், 'ஏனய்யா காலையிலேயே இப்படி இம்சை பண்ணுறீங்க? அதுவும் கண்ணு தெரியாத மூதாட்டி கேட்டதுன்னு, உடனே வந்து விடுவீர்களா? மிஞ்சிப்போனால் 1000 2000 போட வந்திருக்கும். அதெல்லாம் பார்க்க முடியாது என்று கூறி அனுப்பி விடு' என்றார்.

'மிக அதிகமான பணம் போடப் போவதாகக் கூறினார் அந்த அம்மா' எனக் கண்களில் ஒரு வகை ஆச்சரியத்தோடு கூறினான் காவலாளி. 'மிக அதிகமான பணமா? சரி, உள்ளே அனுப்பி விடு அப்படி எவ்வளவுதான் போடுதுன்னு பார்ப்போம்' என்று நக்கலாகக் கூறினார் மேலாளர்.


மேலாளருடன் சந்திப்பு

பாட்டி அறைக்குள் வந்தார், 'தம்பி நீங்கள்தான் வலஜா வங்கி மேலாளரா?' என்று கேட்டார். 'நான் தான் சொல்லுங்க. ஏதோ பார்க்கணும் -ன்னு சொன்னீர்களாமே, என்ன விஷயம்?' என்று மூதாட்டியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் பேசினார் மேலாளர்.


தொடர்புடைய பிற கதைகள் (Recommended) :

'அது ஒன்னும் இல்லை அப்பா. என்னிடம் ஒரு கோடி பணம் இருக்கு' என்று பையைத் திறந்து காட்டினார், 'இந்த வங்கியில் போட்ட நல்லதுன்னு சொன்னாங்க. அதான், இங்கே காவல் எல்லாம் பலமா இருக்கா என்று உங்களை விசாரித்துப் போகலாம்னு வந்தேன்' என்றார் மூதாட்டி. ஒரு கோடி ரூபாய் மூதாட்டியிடம் கண்டதும், ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து விட்டார் மேலாளர்.

[அடுத்த பகுதியில்,

ஒரு கோடி ரூபாயை பாட்டி எப்படி சம்பாதித்தார்? பாட்டியை இழிவாக நினைத்த மேலாருக்கு காத்திருக்கும் ஒரு விசித்திரமான சாவல்? சுவாரஸ்யமான அடுத்த பகுதியைப் படிக்க மறாவாதீர்கள்!]

அடுத்த பகுதியைப் பதிவிட்ட உடனே அறிந்துக் கொள்ள 'பெல் பொத்தானை' (bell button) -ஐ அழுத்துங்கள். எங்கள் வலைத்தளம் பாதுகப்பனது. பெல் பொத்தனை நம்பி அழுத்தலாம்.  Feel 100% safe and secure to click bell button and get instant updates. Thanking you! நன்றி!!!  

அடுத்த பகுதி : Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 2 | Wise old Woman part 2


Comments

  1. nalla iruku ... michatha eppa poduvinga??

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா! அடுத்த பதிவு வெளியிட்டு விட்டோம். 👉https://tamilstories4everyone.blogspot.com/2020/05/tamil-blogs-wise-old-woman-part-2.html👈 உங்கள் ஆதரவுக்கு நன்றி!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை