Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman


வணக்கம் நண்பர்களே! கதைகள் வாழ்வை வளமாக்கும். வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் கதைகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.

Character or money text image in Tamil blog

கேள்விப்பட்ட கதைகளையே மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் அமைகிறது. ஆனால், நமது 'Tamil Stories 4 Everyone Team' உங்களுக்குப் படிக்க வித்தியாசமான கதைகளை அளிப்பதில் பெருமை கொள்கிறது. இன்று ஒரு சுவையான கதையோடு "Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman" வந்துள்ளேன். படித்து மகிழுங்கள்!

பணக்கார பெண் :

விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் தங்கள் விமானத்தில் ஏறப் பயணச்சீட்டை சரி பார்க்கக் காத்துக் கொண்டிருந்தனர். அப்படி அனைவரும் வரிசையில் நின்று பொறுமை காத்து கொண்டிருந்த நேரம், ஒரே ஒரு பெண் மட்டும் வரிசையில் நிற்காமல் நேராக ஆய்வு செய்யும் இடத்திற்கு வந்து தனது பயணச்சீட்டை நீட்டினாள்.
வரிசையில் நிற்பவர்கள் அனைவருக்கும் கோபம் வந்தது. எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பயணசீட்டு ஆய்வாளர், 'வரிசையில் வந்து நில்லுங்கள். அதுதான் சரி. அப்பொழுது தான் நான் உங்கள் சீட்டைச் சரி பார்ப்பேன்' என்றார். வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் மனம் அமைதியானது.
ஆனால் அந்தப் பெண் அங்கிருந்து ஒரு அடி கூட நகரவில்லை, அவளின் பெயர் ராணி. பெயர் மட்டும் ராணி அல்ல அவள் கழுத்தில் அழகிய முத்து மாலை மின்னியது, கைகளில் நவரத்தின வளையலும், காதில் பார்ப்பவர்கள் கண்கள் கூசும் அளவிற்கு வைர தோடும் அணிந்திருந்தாள். இவை அனைத்திற்கும் மேலாகக் கையில் தங்கத்தினால் செய்யப்பட்ட பையை வைத்திருந்தாள்.
விமான நிலையமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வந்திருந்தாள். விலை உயர்ந்த பொருட்களோடு இருந்தாலும், அவள் பேச்சும் திமிரான முகபாவனையும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. நடையில் கூட அவளின் அகம்பாவத்தை உயர்த்திக் காட்டும் வண்ணம் நடை போட்டாள்.
[ரொம்ப பணம் திமிர் கொண்ட பெண்ணாக இருக்கிறாள். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாளோ! பயண சீட்டு சரி பார்க்கும் இடத்தில் கதையை விட்டுவிட்டேன் அல்லவா? தொடரலாம்...]

ஆய்வாளரிடம் வம்பு :

அங்கிருந்து ஒரு அடி கூட நகர மறுத்த அவள், தனது குரலைச் சற்று உயர்த்தினால், 'சீட்டைச் சரிபார்த்து என்னை முதலில் உள்ளே அனுப்புங்கள். என்னால் காத்திருக்க இயலாது' என்று தனக்கே உரிய திமிரோடு கூறினாள். ஆய்வாளருக்குக் கோபம் வந்தாலும், 'இவ்வளவு உரிமையோடு குரலை உயர்த்திப் பேசும் அவள் யார்?' என்ற ஆர்வம் வந்தது.
'நீங்கள் யார்? உங்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?' என்று கேட்டுவிட்டார் ஆய்வாளர். 'நான் யார் என்று உன்னிடம் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் நேரத்தை விரயம் செய்யாமல் உள்ளே விடு' என்று ஆணவத்தில் ஒரு துளி கூடக் குறையாமல் கூறினாள் ராணி.

சுவையான பிற கதைகள் (Recommended) : Tamil blogs | ஊரில் என்ன விசேஷம்? | Short story of wise village boy

ஆய்வாளருக்குக் கோபம் தலைக்கேறியது, 'என்னால் உங்களை உள்ளே அனுப்ப இயலாது. வரிசையில் நில்லுங்கள்' என்று அவரின் சுய மரியாதையை வெளிப்படுத்தினார்.
'அப்படியா! சரி நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று தனது கைபேசியை எடுத்தாள் யாரையோ தொடர்புகொண்டு, இரண்டே வார்த்தைகள் பேசி வைத்து விட்டாள். சற்று நேரத்தில், ஆய்வாளருக்கு அழைப்பு வந்தது. அந்தப் பெண்ணை முதலில் உள்ளே விடுமாறு அவரின் மேலதிகாரி கட்டளையிட்டார்.
ஆய்வாளர் குழப்பத்தோடு அந்தப் பெண்ணைப் பார்த்தார். 'என்ன? நான் இப்பொழுது உள்ளே செல்லலாம் அல்லவா?' என்று நக்கலாகச் சிரித்தபடி கூறினாள். உள்ளே செல்லும்படி சைகை காட்டினார்ஆய்வாளர்.

விமானத்தில் அரங்கேறும் கூத்து :

அந்தப் பெண் நேராக அவளுக்கான விமானத்தில் ஏறினாள். உள்ள ஏறும்பொழுது, ஒருவகை சலிப்போடு ஏறினாள். [அவசியம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் கடைசி நிமிடத்தில் முதல் வகுப்பு இருக்கைஅவளுக்கு கிடைக்காமல், இரண்டாம் வகுப்பில் தான் இருக்கை கிடைத்தது. அந்தச் சலிப்புதான் அம்மாவிற்கு.]
தனது இருக்கைக்குச் செல்லும்பொழுதே புலம்பிக்கொண்டிருந்தாள், 'எப்படித்தான் மனிதர்கள் இந்த வகுப்பில் பயணம் செய்கிறார்கள்? விலங்குகளோடு பயணிப்பது போல உள்ளது' என்றாள்.
சுற்றியிருந்த அனைவர் மனதிலும் அவள்மீது கோபத்தை உண்டாக்கிவிட்டாள். 'கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். கொஞ்சம் விட்டால் மேலே விழுந்து விடுவீர்கள் போலும்' என்று ஏற்கனவே தள்ளி நின்று, தன் பைகளை வைத்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் தகராறு செய்தாள்.
ஒரு வழியாக அவளின் இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டாள். விமானம் புறப்படத் தயாரானது. அதற்குச் சற்று நிமிடம் முன்னர், ஒரு வயதான பெரியவர் விமானத்தில் ஏறினார். தனது இருக்கை எண்ணைச் சரிபார்த்து அந்தப் பெண்ணின் அருகே அமர்ந்தார். [இன்னும் சற்று நேரத்தில் எரிமலை வெடிக்கப் போகிறது.]

பெரியவரோடு பிரச்சனை :

அந்தப் பெரியவர் அவள் அருகில் அமர்ந்து அரைநொடி கூட ஆகி இருக்காது. 'என்ன நடக்கிறது இங்கே?' என்று கோபமாகக் கத்தினாள் ராணி. அதைக் கவனித்த விமானத்தின் பணிப்பெண் விரைந்து அவளிடம் சென்றாள்.

நகைச்சுவை சிறு கதை :

'மேடம், என்ன நேர்ந்தது? ஏதேனும் தவறு ஆகிவிட்டதா?' என்று பணிவோடு கேட்டாள். 'நான் யார் தெரியுமா? என்னுடன் ஒரு பெரியவர், அதுவும் பார்க்க ஏழையாகத் தெரிகிறார். அவர் பயணிப்பதா?' என்று கேட்டாள் ராணி. விமான பயணிகள் அனைவரும் திகைத்துபோயினர்.
[அடுத்த பதிவில்,
பெரியவரை இடம்மாற்றினால் தான் விமானம் புறப்பட அனுமதிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் ராணி. பெரியவருக்கு என்ன நேர்ந்தது? யார் உதவி செய்வார்?
அனைத்திற்கும் விடை அடுத்த இறுதி பதிவில் உங்களுக்காகக் காத்திருகிறது. படிக்கத் தவறாதீர்கள்.]
அடுத்த பகுதி :

Tamil blogs | குணமா? பணமா? பகுதி -2 | Story of adamant rich woman part 2


அடுத்த பகுதியைப் பதிவிட்ட உடனே அறிந்துக் கொள்ள 'பெல் (bell)' -ஐ அழுத்துங்கள். பெல்-ஐ நீங்கள் நம்பி அழுத்தலாம், எங்கள் வலைத்தளம் மிகவும் பாதுகாப்பானது. Click the bell and allow us to notify our new posts. Notications are 100% safe to click and allow. Get our unique stories noified quickly. Thank you! நன்றி!!!

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை