Tamil blogs | கடவுளின் கால்தடம் எங்கே ? | Interesing story of devotion


வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு அருமையான பதிவு உங்களுக்காகக் காத்திருக்கிறது. மனிதன் இறைவனின் சிறந்த படைப்புகளுள் ஒன்று. வாழ்க்கையில் இன்பம் துன்பங்களைக் கடந்து நாம் அடைய வேண்டியது இறைவனின் பாதங்கள் என்பது நம் முன்னோர்களின் கருத்து. 
old man in Tamil blogs 'Tamil Story 4 Everyone'

'இறைவனை எண்ணியவருக்கு துன்பம் ஏது?' என்று நம் மதங்கள் அனைத்தும் உரைக்கும். இன்று ஒரு சாமானிய பக்தனின் கதையை 'Tamil blogs | கடவுளின் கால்தடம் எங்கே ? | Interesing story of devotion' உங்களுக்காகப் பதிவிடுவதில் மகிழ்ச்சி!

பக்தன் கண்ணப்பன்!

ஒரு ஊரில் கண்ணப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அதிக கடவுள் பக்தி கொண்டவன். காலையும் மாலையும் பக்தி பாடல்கள், வழிபாடு என்று மனதார இறைவனை பூஜை செய்து வந்தான். ஊர் மக்கள் அனைவருடனும் அன்பாகப் பழகுவான். குழந்தைகளுக்கு நன்னெறிகதைகள் பக்தி கதைகள் கூறுவான். ஊர் மக்கள் அனைவரும் அவனைச் சிறந்த பக்தனாகப் போற்றினர்.
அவனுக்கு வயது 80 ஆகியது. வாழ்வில் பல இன்ப துன்பங்களை அனுபவித்து ஆயிற்று. அந்த ஊரில் உள்ள ஆலயம் மிகவும் அழகானது. அங்குள்ள பூசாரி கண்ணப்பனின் நெருங்கிய நண்பன். சில சமயங்களில் இருவரும் இணைந்து இறைவனின் புகழ் பாடுவது வழக்கம். 
அசம்பாவிதம் நிகழ்ந்தது
ஒரு நாள் பூசாரி சின்ன வேலையாகப் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு ஊர் திரும்பும் நேரம் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. பூசாரிக்கு எதிர்பாராத.விதமாகச் சாலையில் விபத்து ஏற்பட்டுவிட்டது. அவரை அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
அனைத்து உறவினர்களுக்கும் நண்பர்களும் செய்தியைத் தெரிவித்தனர். நண்பனுக்கு நிகழ்ந்ததை கேட்டுக் அறிந்து மருத்துவமனைக்கு வந்தடைந்தான் கண்ணப்பன். நண்பனின் நிலையைக் கண்டு வருந்தினான் நண்பனின் உயிரைக் காக்க இறைவனை வழிபட ஆரம்பித்தான். 


காயங்கள் குறைவு என்பதால் கடவுள் நிச்சயமாக நண்பனைக் காப்பாற்றி விடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தான். ஆனால், அன்று நிகழ்ந்தது வேறு. எதிர்பாராத விதமாக அவன் நண்பனின் உயிர் பிரிந்தது. மிகுந்த மன வலி அடைந்தான்.

மனதில் நிறைந்த குழப்பம்

நண்பனின் மரணம் ஒரு பக்கம் தன் நம்பிக்கை பொய்யாகிப் போனது மறுபக்கம். இறந்த தன் நண்பனின் கடைசி ஊர்வலத்தில் கலந்து கொண்டான் கண்ணப்பன். அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்த வரிகளை மக்கள் வாயால் பேசத் தொடங்கினர்.
'இவ்வளவு பூஜை வழிபாடு இறைவனுக்காகச் செய்த இவருக்கா இந்த நிலை? இறைவன் இருக்கிறாரா இல்லையா?' என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தனர். இத்தகைய கேள்விகள் கண்ணப்பனின் மனதையும் ஈட்டி போலத் துளைத்தது. இவ்வளவு நாட்கள் தான் செய்த வழிபாடு கொண்டிருந்த நம்பிக்கை அனைத்தும் அர்த்தமற்றது என்று மனதினுள் புலம்பினான். அன்று முதல் வழிபாடு பூஜையென எதையும் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தான்.

கண்ணப்பனின் மரணம்

காலங்கள் உருண்டோடின 90 வயதை நெருங்கினான் கண்ணப்பன். ஒருநாள் இரவு இதயம் வலிப்பதை உணர்ந்தான். அடுத்த நொடியே, அவன் உயிர் பிரிந்தது தன் உடல் கீழே இருப்பதையும் அவன் காற்றில் பறப்பதையும் உணர்ந்தான். சட்டென்று அவன் பின்னால் ஒரு ஒளி வீசுவதை உணர்ந்தான்.
திரும்பிப் பார்க்க, அவன் கண்கள் கூசியது. அப்படியொரு தூய்மையான ஒளி. அந்த ஒளி அன்பாக அவனை அழைத்து மேல் உலகிற்கு சென்றது. அவரே கடவுள் என்பதை உணர்ந்தான் கண்ணப்பன். பேச வார்த்தைகளின்றி பேர் இன்பத்தோடு இறைவனைக் கண்டான்.
தன் வாழ்நாள் முழுவதும் வாழ்த்திய கடவுளை வணங்கினான். ஆனால், அவன் முகம் சற்று நேரத்தில் வாடிப்போனது. 'என்ன ஆயிற்று? ஏன் உன் முகம் வாடிப் போயிற்று?' என்று இறைவன் கேட்டார். 'இறைவா தம்மையே வாழ்நாள் முழுவதும் வழிபட்டு வந்த என் நண்பனை, ஏன் காப்பாற்றவில்லை?' என்று கேள்வி எழுப்பினான் கண்ணப்பன்.
இறைவனின் அன்பு
'கண்ணப்பா! உன் நண்பன் நோய்வாய்ப்பட்டுத் துன்பம் அனுபவித்து இறக்க வேண்டியதாக விதி இருந்தது. என் பக்தன் துன்பப்படுவதை என்னால் காண இயலாது. எனவே, விபத்தில் சிறுகாயங்களோடு வலியின்றி அவன் உயிர் பிரிய வழி செய்தேன்' என்றார் இறைவன்.
கண்ணப்பன், 'இறைவா என்னை மன்னியுங்கள்!' என்று வருந்தினான்.
காலடிதடங்கள்
இறைவன் கண்ணப்பனை அழைத்துச் சென்று அவன் வாழ்க்கை நிகழ்வுகளைக் கண் முன்னே காட்டினார். இறைவன், 'அதோ பார், உன் வாழ்வின் இன்பமான துன்பமான காலங்களை' என்று காட்டினார்.
கண்ணப்பனின் இன்பமான நேரத்தில் அவன்பின் 'நான்கு' காலடித்தடங்களை கண்டான். 'நீ கடந்து வந்த இன்பமான நேரத்தில், உன்னோடு நானும் இருந்தேன்' என்றார் இறைவன்.
துன்பமான நேரத்தில் அவன்பின் 'இரண்டு' காலடித்தடங்கள் இருந்ததை கவனித்தான் கண்ணப்பன். 'இன்பத்தில் என்னோடு இருந்த தாங்கள் துன்பத்தில் ஏன் என்னுடன் இல்லை?' என்று குழப்பத்தோடு கேட்டான்.

தொடர்புடிய பிற கதைகள்Tamil blogs | ஊரில் என்ன விசேஷம்? | Short story of wise village boy
'கண்ணப்பா! உற்றுப்பார். அது உன் காலடி தடங்கள் அல்ல. அவை என்னுடைய காலடித்தடங்கள். துன்பமான நேரத்தில் நானே உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்' என்று இறைவன் புன்னகையுடன் கூறினார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, அவர் பாதங்களைப் பற்றிக்கொண்டான் கண்ணப்பன்.
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளையும் பதிவிட மறவாதீர்கள்! மேலும் பல வித்தியசமான கதைகளைத் தெரிந்துக் கொள்ள 'Tamil Stories 4 Everyone' உறுப்பினராக இணைந்திடுங்கள்! நன்றி!!!


Comments

  1. மிகவும் அருமையான மற்றும் சிந்திக்க வைத்தது கதை👍👍

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை கூறி ஊக்குவித்ததற்கு நன்றி☺!

      Delete

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை