Funny stories in Tamil | Online class-னா சும்மாவா?

வணக்கம் நண்பர்களே! 'Tamil Stories 4 Everyone' -க்கு உங்களை வரவேற்கிறேன்!!கொரோனா (Corona) நேரத்துலே வீட்டிற்குள்ளே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அதில் குறிப்பிட தக்க சம்பவம் 'ஆன்லைன் கிளாஸ் (Online Class)' என்ற பெயரில் நடக்கும் கலவரம். 

ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வேளையில், எப்பொழுது அறைக்குள் போகலாம்? எப்பொழுது போகக் கூடாது? எப்பொழுது பேச அனுமதி உண்டு? எப்பொழுது இல்லை? என்று தெரியாமல் அல்லாடும் பெரியவர்கள். ஆன்லைன் பாடமா? தூக்கமா? என கிளாஸ்-க்கு இடையில் அல்லாடும் சிறியவர்கள்.

Funny stories in Tamil title card image


நம் இல்லங்களில் நடைப்பெறுவது போன்ற சம்பவம் ஒன்று, இந்தக் கதையில் 'Funny stories in Tamil | Online class-னா சும்மாவா?' ஒரு அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடைபெறுகிறது. அப்படி என்ன சம்பவம்?  

அம்மா : டேய் பாண்டியா! கொஞ்சம் பக்கத்து கடையிலிருந்து மிளகாய்த்தூள் வாங்கிட்டு வாடா... 

பாண்டி : இந்தக் கொரோனா காரணமா வீட்டுல இருக்க சொன்னதும் சொன்னாங்க, அடிக்கடி வேலை விடுறாங்க. இந்தப் பக்கத்துக் கடை வேற திறந்துட்டாங்க... எனக்குக் காலேஜ் (College) திறந்ததும் திறந்திருக்கக் கூடாதா? 

அம்மா : என்னடா ஏதோ முணுமுணுத்துக்கிட்டு இருக்க? இரவு சாப்பாடு வேணுமா வேண்டாமா? 

பாண்டி : என் மாஸ்க் எங்க இருக்குன்னு தேடிட்டு இருந்தேன் ம்மா... 

அம்மா : வெளிய கொடியில் தான் காயப் போட்டு இருக்கேன், போட்டுக்கிட்டு போயிட்டு வேகமா வா. 

பாண்டி : போறேன்... போறேன்... 

(கடைக்குச் சென்று வந்தப் பிறகு)

பாண்டி அம்மா நீங்கக் கேட்ட மிளகாய்த்தூள். இதுவே முதலும் கடைசியுமா இருக்கணும் சும்மா கடைக்கு அனுப்பாதீங்க! அப்புறம்... 

அம்மா  :  அப்புறம்... என்னடா?

கொரோனா வந்துடும் சொல்ல வந்தேன்... 

அம்மா : ஏதோ இப்பதான் காலேஜ் போகாம வீட்டிலிருந்து கொஞ்சம் வேலை செய்யுற, இதுவே காலேஜ் இருந்தா படிக்குறேன் படிக்குறேன்னு... அந்தப் போனை நோண்டிட்டு இருப்ப. என்றைக்காவது கேட்டதும் கடைக்குப் போயிட்டு வந்திருக்கியா? ஏதோ அந்தக் கொரோனா வந்த நேரம் எனக்கு உதவி செய்யுற. 

பாண்டி : ஆமாம்... ஆமாம்... எல்லாத்துக்கும் இந்தக் கொரோனா தான் காரணம்! அது மட்டும் போகட்டும்... வீட்டுல இருக்கேனா பாருங்க (என்று தம்பி தன்னுகுள்ளே சொல்லிக்கிட்டாரு) 

(செல்போன் அறிவிப்பு |notification| வந்தது. ஓடிச் சென்று எடுத்து மெசேஜ் | Message | -ஐ படித்தான்)

பாண்டி : அம்மா நாளையிலிருந்து ஆன்லைன் கிளாஸ் இருக்காம். 

அம்மா : அப்படின்னா என்னடா? 

பாண்டி : போன்லயே பாடம் நடத்துவாங்க... கேள்வி கேட்பாங்க... தவறாமல் கலந்துக்கணும், அட்டனன்ஸ் (Attendance) இருக்கும். இன்னியோட என்னை வேலை விடுற வேலைய நிறுத்திக்கோங்க. 

அம்மா  :  ரொம்ப முக்கியமானதா? 

பாண்டி : என்னமா ரொம்ப முக்கியமா-ன்னு கேடக்குறீங்க! அதுல கலந்துக்காம போன பெயில் (fail) ஆகிடுவேன் பாத்துக்கோங்க. (என்றப்படி நயமாகத் தனக்குள் சிரித்தான்)

அம்மா : அப்படியா? 

பாண்டி : ஆமாம்... ஆமாம்... நடுவுல வந்து, இதைச் செய் கடைக்குப் போ-ன்னு சொல்லக் கூடாது, சரியா? இப்பவே பழகிக்கோங்க. நாளை 9 மணிக்குக் கிளாஸ் இருக்கு, 7 மணிக்கு எழுப்பி விடுங்க. நான் தூங்க போறேன்...  

அம்மா : சரிடா! 

(அடுத்த நாள் காலை, வழக்கம்போல....) 

நீங்கள் படிக்க வேண்டிய பிற நகைச்சுவை கதை : Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை  

அம்மா : டேய் பாண்டி... எழுந்திருடா...  பெயில் ஆகிய போற... ஏதோ கிளாஸ் இருக்கு சொல்லிட்டு 8.50 வரை தூங்குற... எழுந்திருடா... 

பாண்டி : 8.50-ஆ? யம்மா.... நான் உங்களை எப்போ எழுப்பச் சொன்னேன்? என் போன் எங்கே? 

அம்மா : ஏழு மணியிலிருந்து எழுப்பிட்டு தான்டா இருக்கேன், இதோ இருக்கு போன். 

(வேக வேகமாக 9 மணிக்குள் ஆன்லைன் கிளாஸ் குரூப்-ஐ தேடி அதில் சேர்ந்தான்)

பாண்டி : ஒரு வழியாக குரூப்-ல சேர்ந்துட்டோம்... 

ஆசிரியர் : ஹலோ ஸ்டுடென்ட்ஸ்! நான் தான் இந்த வருடம் உங்களுடைய  மேக்ஸ் டீச்சர் (Maths Teacher). 

பாண்டி : வணக்கம் மேம் (Mam).

அம்மா : டேய் பாண்டி! பல் துலக்கிட்டு கிளாஸ்-ல கலந்து இருக்கலாம்- என்ன பழக்கம் இது? 

பாண்டி : (அலறியடித்துக்கொண்டு)அம்மா நீங்கள் பேசுவது எல்லாருக்கும் கேட்கும்... அமைதியா இருங்க! (என மைக்கை ஆப் செய்தான்) 

(அனைவரும் சிரிக்க தொடங்கினர்) 

அம்மா : அச்சச்சோ... அம்மா உன் நல்லதுக்கு தான் சொன்னேன். 

ஆசிரியர் : யாரது பாண்டி? வகுப்பு இருக்கு தெரியாதா? பல் துலக்காமல்.......?!

(இடையே ஒரு குரல் மேம் மேம்...) 

பாண்டி : சாரி மேம். பிரேக்கில் (Break) பல் துலக்கிடுறேன்... 

சிரியர் : பாண்டி, முதல் நாள் அப்படி-ங்கறதால விடுறேன். நாளைக்கு தயாரா இருக்கணும் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே. 

பாண்டி : சரி மேம். 

ஆசிரியர்இன்றைய வகுப்புக்குச் செல்லலாம்... 

அம்மா : பாண்டி... பேசலாமா? (சைகை செய்தார்) 

பாண்டி : மைக் ஆப் -ல தான் இருக்கு சொல்லுங்க அம்மா. 

அம்மா : இந்த மூடிய கொஞ்சம் திறந்த தா... திறக்க முடியல... 

பாண்டி : அம்மா, நான் தான் சொல்லி இருக்கேன்- கிளாஸ் அப்போ  வேலை விடக்கூடாது-ன்னு? போங்க அப்பா சும்மா தா இருப்பாரு, அவரைத் திறக்கச் சொல்லுங்க... கொஞ்சம் கவனம் சிதறனாலும் கிளாஸ் மிஸ் ஆகிறும்... அப்புறம் நல்ல மார்க் எடுக்கல-ன்னு திட்டக் கூடாது. 

அம்மா : சரிடா... நீ நல்ல படிச்சா போதும்... நான் அப்பா-வ திறக்கச் சொல்லுறேன். நீ அங்கே கவனி.

பாண்டி : அம்மா... அந்தக் கையில என்ன வெச்சிருகீங்க? மாங்கவா? இங்க வெச்சிட்டு போங்க... பசியில நல்லா கவனிக்க முடியாது. சாபிட்டுக்கிட்டே தெம்ப கவனிக்கிறேன்...

அம்மா : பல் துலக்கல....!?

பாண்டி : இப்போ துலக்குறது முக்கியமா? மார்க் முக்கியமா?

அம்மா : மார்க்- தான் நீ சாப்பிட்டுடே தெம்பா கவனி.  

(கால்மேல் கால் போட்டுக் கொண்டு மாங்காய் தின்னபடி... நிச்சயமாக கிளாஸ்-ஐ கவனிக்கவில்லை! போனை பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அம்மா மீண்டும் வந்தார்)

அம்மா : நீ நல்லா படிக்கிற பையன்னு..உன்னை ஒருமுறை ஆசிரியர் பாராட்டினதா சொன்ன-ல. இன்னைக்கு அவங்க கேள்விக்குப் பதில் சொல்லு. உங்க ஆசிரியர் பாராட்டுவதை அம்மா கேட்கணும்-ன்னு ஆசையா இருக்கு. 

பாண்டி : பாராட்டா? எதாவது கதை விட்டிருப்போம்... சரி சமாளிப்போம்... (தனக்குள் எண்ணி கொண்டான்). நான் என்ன சின்னப் பையனா? பாராட்டுக்காகப் பதில் சொல்ல? சரி, ஏதோ ஆசைப்படுறீங்க... இப்ப ஐயா வோட திறமையைப் பாருங்க!

(என்று தன் சட்டையைத் தூக்கிக்கொண்டு உட்கார்ந்தான்)

ஆசிரியர் : ஸ்டூடண்ட்ஸ், யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருக்கா? 

பாண்டி : மேம், எனக்குக் கடைசியா  நீங்கச்  சொன்னதுல ஒரு சந்தேகம் இருக்கு.  

(இடையில் மேம் மேம் என்று மீண்டும் அதே குரல்) 

ஆசிரியர் : இதோ விடை அளிக்கிறேன் பாண்டி. ஆனால், அதற்கு முன் யாரது இடையில் என்னை அடிக்கடி கூப்பிடுறது.

மாணவன் : நான் தான் பிரேம் மேம். 

ஆசிரியர் : என்ன ஆயிற்று  பிரேம். 

பிரேம் : பாண்டி அண்ணா மூன்றாம் ஆண்டு வகுப்புக்குப் பதில் இந்தக் குரூப்பில் சேர்ந்துட்டாரு மேம். இது இரண்டாம் ஆண்டு மேம்.

பாண்டி  : இரண்டாம் ஆண்டா? விளையாடாத பிரேம்... ஏன் கிண்டல் பண்ற வகுப்பு நேரத்தில... பிரேம் பிரியா பாண்டி சரியான உங்க பேர் எல்லாம் இருக்கே!

பிரேம் : அண்ணா, நாங்க உங்கள் பக்கத்து வகுப்பு இரண்டாம் ஆண்டு படிக்கிற பிரேம் பிரியா. 

பாண்டி : அட ஆமாம் வேற புது புது பேர் எல்லாம் கூட இருக்கு. 

ஆசிரியர் : பாண்டி, தயவுசெய்து குழுவை விட்டு வெளியே செல். ஏற்கனவே படித்த பாடத்திற்கும் புதிய பாடத்திற்கும் வித்தியாசம் கூடத் தெரியாதா உனக்கு? இதில் சந்தேகம் வேற... 

பாண்டி மட மடவெனக் குழுவை விட்டு வெளியேறியனான். 

அப்பொழுது தான் ஒன்றை உணர்ந்தான், 'ஐயா வோ திறமையைப் பாருங்க'-ன்னு லவுட் ஸ்பீக்கரை (Loud Speaker)-ஐ ஆன்(On) செய்து அம்மாவைக் கேட்க வைத்தது நினைவிற்கு வந்தது. 

முகத்தைச் சிரித்தப் படி வைத்துக் கொண்டு தன் அருகில் இருந்த அம்மாவை நோக்கித் தன் தலையைத் திருப்பினான். 

துவரை சாந்தமாக இருந்த அவன் அம்மா சந்திரமுகியாக மாறுவதை கண்டான். 

அம்மா : சார் மூடிய திறந்து குடுக்குற இடைவெளில கிளாஸ் மிஸ் ஆகிறுமோ? மாங்காய் சாப்பிட்டு தெம்பா கவனிச்சா தான் மார்க் கிடைக்குமா? இரண்டாம் வகுப்புல என்ன படிச்ச-ன்னு உனக்கே தெரியல இதுல சந்தேகம், பாராட்டு -ன்னு கதை விடுறியா?    

என்றுபடி அவரின் கை ஆயுதத்தைத் தேடியது. பிறகு என்ன பாண்டிக்கு தீபாவளி தான். 

இதுபோல அம்மா கையால் அன்பான அடிகள் விழுவது வழக்கம் தானே? அப்படி எக்குத்தப்பாக அம்மாவிடம் மாட்டிக் கொண்டு 'எவ்வளவு அடித்தாலும் தாங்கும்' இதயங்களுக்கு ஒரு சல்யூட்!

படிக்க வேண்டிய நகைச்சுவை கதை (Recommended) : Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman

நண்பர்களே! இந்தக் கதை  Funny stories in Tamil | Online class-னா சும்மாவா?உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் பல சுவாரசியமான கதைகளைப் படிக்க நம் குழுவில் இணைய மறவாதீர்கள்! மீண்டும் ஒரு சூப்பர் கதையோடு சிந்திப்போம்!

Related Queries :

Funny stories in Tamil, tamil funny stories pdf, Tamil blog, Tamil story blog, tamil funny stories in tamil language


Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை